சமூக செய்திகள்

பொதுபலசேனாவுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை: நியாஸ் மௌலவி

Thursday, 21 August 2014 19:46

பொதுபலசேனாவுடனான சந்திப்பில் நான் கலந்துகொள்ளவில்லை என கெலிஓயாவை சேர்ந்த நியாசியா ஹஜ் மற்றும் உம்ரா முகவர் நிலைய உரிமையாளர் நியாஸ் மௌலவி தெரிவித்தார்.

தர்கா நகர் மக்களுக்கு காத்தான்குடி சம்மேளத்தினால் நிதியுதவி

Thursday, 21 August 2014 06:18

கடந்த ஜுன் மாதம் அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரத்தினால் பாதிக்கப்பட்ட தர்கா நகர் மக்களுக்காக காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் சேகரிக்கப்பட்ட நிதி கையளிக்கப்பட்டுள்ளது என சம்மேளனத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.சபில் நளீமி தெரிவித்தார்.

அமைச்சர் பௌசியின் ஹஜ் கோட்டா பட்டியலை அமுல்படுத்துமாறு ஆலோசனை

Wednesday, 20 August 2014 19:39

சிரேஷ்ட அமைச்சர் பௌசி தலைமையிலான ஹஜ் குழுவினால் வெளியிடப்பட்ட ஹஜ் கோட்டா பட்டியலை அமுல்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பொதுபலசேனா - ஹஜ் முகவர்கள் சங்கம் சந்திப்பு

Wednesday, 20 August 2014 16:24

பொதுபலசேனா அமைப்பிற்கும் ஹஜ் முகவர்கள் சங்கத்திற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று காலை இடம்பெற்றது என பொதுபலசேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திலந்த விதானகே விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

புலமைப்பரிசில் பரீட்சை

Sunday, 17 August 2014 18:56

ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இன்று நாடு பூராகவும் இடம்பெற்றது.

எஸ்.எம்.எஸ்.விவகாரம்; மூன்று முஸ்லிம்கள் எச்சரித்து விடுவிப்பு

Saturday, 16 August 2014 13:01

குறுஞ்செய்தி ஊடாக பொய்யான செய்திகளை பரப்பினார்கள் என்ற குற்றச்சாட்டுக்குள்ளான மூன்று முஸ்லிம் இளைஞர்கள் இன்று எச்சரித்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

'தீவிரவாதிகளுக்குக் களம் அமைக்கும் பொலிஸ் திணைக்களத்தின் முன்னெடுப்பு'

Saturday, 16 August 2014 09:21

தீவிரவாதிகள் களம் அமைப்பதற்கு பொலிஸ் திணைக்களம் முன்னெடுப்பதாக தேசிய சூரா சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

வரட்சியால் பாதிக்கப்பட்ட கிழக்கு மக்களுக்கு தேரர்கள் உதவி

Friday, 15 August 2014 20:43

மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவில்  ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்தின் 233ஆவது படைப் பிரிவின் உதவியுடன் பல்வேறு உதவித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

ஹஜ் கோட்டா; உயர் நீதிமன்றத் தீர்ப்பின் படி தயாரிக்கப்பட்ட பட்டியல் சவூதியினால் நிராகரிப்பு

Friday, 15 August 2014 14:32

உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி புத்தசாசன மற்றும்  சமய விவகார அமைச்சின் செயலாளர் எம்.கே.டி.எஸ்.திசாநாயக்க தயாரித்து அனுப்பிய ஹஜ் முகவர்களுக்கான கோட்டா பட்டியல் நிராகரிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை வேண்டி தொழுமாறு ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

Friday, 15 August 2014 13:53

நாட்டின் பல பாகங்களில் தற்போது ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக மழை வேண்டி தொழுகையிலும் பிராத்தனையிலும் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரச சாகித்திய விழாவில் 20 தமிழ் நூல்களுக்கு விருது

Friday, 15 August 2014 13:28

20 தமிழ் நூல்கள் உட்பட 152 நூல்களிற்கு அரச சாகித்திய விழாவில் விருதுகள் வழங்கப்படவுள்ளன என கலாசார அமைச்சு அறிவித்தது.

காஸா மக்களுக்கு இலங்கை அரசாங்கம் நிதியுதவி

Thursday, 14 August 2014 13:51

இஸ்ரேலின் கொடூர தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள பஸ்தீன் மக்கள் இலங்கை அரசாங்கம் நிதியுதவி வழங்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அறிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கத்திற்கு முஸ்லிம்கள் தக்க பாடம் புகட்டுவர்: தௌஹீத் ஜமாத் ( வீடியோ இணைப்பு)

Thursday, 14 August 2014 11:51

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு அடுத்த ஜனாதிபதித்; தேர்தலில் முஸ்லிம் மக்கள் தக்க பாடம் புகட்டுவோம் என ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் அறிவித்தது.

பல சதிகளை மீறி கொழும்பில் இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் (வீடியோ இணைப்பு)

Wednesday, 13 August 2014 19:11

பல சதிகளையும் மீறி இஸ்ரேலிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் இன்று நண்பகல் கெர்ழும்பில் இடம்பெற்றது.

தௌஹீத் ஜமாதின் ஆர்ப்பாட்ட இடத்திற்கு பொதுபலசேனா தேரர்கள் வருகை (வீடியோ இணைப்பு)

Wednesday, 13 August 2014 16:12

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாதின் ஏற்பாட்டிலான ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு பொதுபலசேனாவின் தேரர்கள் வருகை தந்தனர்.

இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறும்: தௌஹீத் ஜமாத்

Wednesday, 13 August 2014 09:48

ஏற்கனவே திட்டமிட்டமிட்ட படி இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறும் என ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் அறிவித்தது.

யூஎன்டிபியின் இலங்கை பணிப்பாளராக யோன் சொரேன்ஸன் நியமனம்

Tuesday, 12 August 2014 14:03

யூஎன்டிபி என்று அழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளராக யோன்; சொரேன்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அளுத்கம விவகாரம்; நஷ்டஈடு கோரி யாரும் விண்ணப்பிக்கவில்லை: புனர்வாழ்வு அதிகார சபை

Tuesday, 12 August 2014 07:44

அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இதுவரை நஷ்டஈடு கோரி விண்ணப்பிக்கவில்லை என புனர்வாழ்வு அதிகார சபை அறிவித்தது.

காஸா மக்களுக்கு நிதி ரீதியான உதவிகளை வழங்கவும்: பலஸ்தீன் தூதுவர் (வீடியோ இணைப்பு)

Monday, 11 August 2014 16:02

இஸ்ரேலிய அரசாங்கத்தின் மிக கொடூரமான தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களுக்கு நிதி நிதி ரீதியான உதவிகளை வழங்குமாறு இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் சுஹைர் சயீட் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி

Monday, 11 August 2014 15:42

பலஸ்தீன், காஸா பகுதியில் இஸ்ரேல் மேற்கொள்ளும் கொடூர தாக்குதலை கண்டித்து எதிர்வரும் புதன்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.


தேடல் கருவி

பிரதான செய்திகள்

Vidiyal TV

Twitter - @vidiyallk

Global Rubber Conference 2014

எழுத்தாளர் பக்கம்

Mabrook

Mabrook

Mabrook

செய்திகள் பற்றி

தரமானதும் நடு நிலையானதுமான செய்திகளையும் மற்றும் பல்வேறு பயனுள்ள தகவல்களையும் வழங்குவதில் சமூக பொறுப்புடனும் முன்னிலையாகவும் செயற்படுவதில் எமது செய்தித்தளம் கவனம் செலுத்தி வருகின்றது.

மேலும் எமது இணையத் தளத்திலுள்ள தகவல்களை பகிர்ந்து கொள்ளும்போது அல்லது மீள் பதிவு செய்யும்போது எமது பெயரை குறிப்பிட்டு பதிவு செய்தல் விரும்பத்தக்கது.

வாசகர் கருத்துக்கள்

 • நடுநிலை வகித்து
  நானிலமெங்கனும்
  நற்பணிசெய்திட
  உண்மையை
  உள்ளவாறு
  எடுத்தோத
  வாழ்த்துக்கள்!

  -தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்-

 • மக்கள் நலன் கருதி என்றும் விடியலாய் புதுப்புதுச் செய்திகளை உடனுக்குடன் வழங்கி எதிர்காலத்தில் மக்கள் மனங்களில் விடியலாய் விரிந்து செல்ல விடியல் இணையத்தளத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ஏ.எஸ்.எம்.ஜாவித் (JP)
  ஊடகவியலாளர்

 • சூழிருள் அகற்றி ஒளிசூழ் உலகு படைக்க உதிக்கும் 'விடியலுக்கு' எனது வாழ்த்துக்கள்.

  -எஸ். ஹமீத் 

 • ஒரு சமூகத்தின் விடிவை நோக்கி பயணிக்கும் விடியல் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.


  - ஏ.எல்.எம்.றியாத், கல்முனை -

 • பல்வேறுபட்ட தரமான செய்திகளை உடனுக்குடன் வழங்கும் விடியலின் சேவை எமது சமூகத்திற்கு தொடர வேண்டும்


  எஸ்.எச்.எம்.சஜாத் - தெஹிவளை

X