சர்வதேச விமான நிலையமாக குஷிநகர் விமான நிலையம் பிரகடனம்

சர்வதேச விமான நிலையமாக குஷிநகர் விமான நிலையம் பிரகடனம்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

புத்த பெருமானின் நான்கு பிரதான புனித ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படும் குஷிநகரில் புத்த பெருமான் பரிநிர்வாண நிலையினை அடைந்துள்ளார்.

இதற்கு காணிக்கையாக மகாபரிநிர்வாண ஆலயத்தில் 5ஆம் நூற்றாண்டை சேர்ந்த சயன நிலை புத்தர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ரமபார் ஸ்தூபி அல்லது முகுபந்தன் கோபுரம் என்று அழைக்கப்படும் அவ்விடத்திலேயே புத்தபெருமானின் ஈமைக் கிரியைகள் நடைபெற்றிருந்ததுடன் இது மகாபரிநிர்வாண ஆலய வளாகத்தில் அமைந்துள்ளது.                                                                                                                                                                                                                                                                குஷிநகர் மாவட்டத்தில் ஏனைய மதஸ்தலங்களும் புத்த பௌத்த கலாசார மையங்களும் காணப்படுகின்றன. குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக பிரகடனம் செய்வதற்கான முக்கிய காரணியாக பௌத்த யாத்திரிகர்கள், வரலாற்றாய்வாளர்கள் மற்றும் கலாசார ஆர்வலர்கள் அனைவரும் குஷிநகருக்கு மட்டுமல்லாது லும்பினி, கபிலவஸ்து மற்றும் சிராவஸ்தி ஆகிய இடங்களுக்கும் செல்வதற்கான வாய்ப்பினை வழங்குகின்றமை அமைகின்றது.