ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளராக சுஹைல் தெரிவு

ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளராக சுஹைல் தெரிவு

-றாசிக் நபாயிஸ்-

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராக சுஹைல் ஜமால்தீன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டமும் நிர்வாகத் தெரிவும் நேற்று (27) சனிக்கிழமை பாடசாலையின் வி.எம்.ஐ.சி.எச்.மண்டபத்தில் இடம்பெற்றது.

அதிபர் ஏ.எல்.சக்காப் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் பழைய நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகமும் இடம்பெற்றது.

இதன்போதே மென் பொருளியலாளரும், காலஞ்சென்ற பொலிஸ் அத்தியட்சர் எச்.எல். ஜமால்தீனின் புதல்வருமான சுஹைல் ஜமால்தீன் பொதுச் செயலாளராக தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதிய நிர்வாக குழுவின் விபரம்:

செயலாளர் - சுஹைல் ஜமால்டீன்

உப செயலாளர் - ஏ.எம்.எம்.றியாஜத்

உப தலைவர் - எம்.பி.சர்மில் ஜஹான்

பொருளாளர் - பி.எம்.அரபாத்

கணக்காய்வாளர் - எம்.எம்.ஏ.சுபைர்

செயற்குழு உறுப்பினர்கள்:
1.    ஏ.ஆர்.எம்.சுல்பி
2.    ஏ.எம்.திலிப் நௌஷாத்
3.    எம்.எம்.ஹிஷாம்
4.    எம்.ஏ.யாஸிர் றஸ்மி
5.    ஏ.எல்.எம்.ஷினாஸ்
6.    ஏ.டபியூ.றியாஸ்
7.    எம்.ஏ.முபீத்
8.    எம்.எம்.சப்னாஸ்
9.    எம்.எல்.கே.எம்.ஜரீத்
10.    ஏ.டபியூ.அஸீம்
11.    எம்.ரி.எம்.அன்பஸ்.
12.    எம்.எம்.ஏ.அஸாம்
13.    எம்.எஸ்.எம்.தானிஸ்