'முன்னணி அரசியல் தலைவர்களின் குடியுரிமையை ரத்துச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை'

எதிர்க்கட்சியின் அரசியல் தலைவர்களின் குடியுரிமையினை  உரிமைகளை ஒழிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று (18) வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

"எதிர்க்கட்சியின் அரசியல் தலைவர்களின் குடியுரிமையினை  உரிமைகளை ஒழிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

இதற்கு எதிராக அதிகபட்ச நடவடிக்கை எடுப்போம்.  ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசாங்கத்தில் உள்ள பல ஏனைய இனைக் கட்சிகளும் பாராளுமன்றத்தை பிரதிநிதிதுவப்படுத்தாத கட்சிகளும் ஜனநாயகத்தை மதிக்கும் அனைவருமே ஜனநாயகத்தை மீறும் வகையில் முடிவெடுப்பவர்களுக்கு எதிராக ஜனநாயாக ரீதியாக நடவடிக்கை எடுக்க முற்போக்காக முன்வருவார்கள் என்று நம்புகிறோம்" என்றார்.