ரமழான் மாத வழிகாட்டல்கள்: சுகாதார அமைச்சின் சுற்றுநிருபம் விரைவில்

ரமழான் மாத வழிகாட்டல்கள்: சுகாதார அமைச்சின் சுற்றுநிருபம் விரைவில்

றிப்தி அலி

"ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டல் சுற்றுநிரூபம் அடுத்த வாரமளவில் வெளியிடப்படும்" என சுகாதா அமைச்சின் கொவிட் - 19 செயற்பாடுகளுக்கான இணைப்பு இணைப்பு பொறுப்பதிகாரி வைத்தியர் அன்வர் ஹம்தான் தெரிவித்தார்.

ரமழான் மாதத்தினையொட்டி பள்ளிவாசல்களுக்கான கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பள்ளிவாசலின் பரப்பளவினைப் பொறுத்தே தொழுகைக்கு அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையினை தீர்மானிப்பது தொடர்பிலும் ஆராயப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.