நாமல் ராஜபக்ஷ பொத்துவிலுக்கு நாளை விஜயம்

நாமல் ராஜபக்ஷ பொத்துவிலுக்கு நாளை விஜயம்

-சம்சுல் ஹுதா-

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, நாளை (26) சனிக்கிழமை பொத்துவிலுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது பொத்துவில், ஜலால்புர மைதானத்தினை அமைச்சர் உத்தியோகபூர்வமாக திறக்கவுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொத்துவில் அமைப்பாளர் ஏ.எம்.அப்துல் மஜீதின் அழைப்பினை ஏற்றே அவர் விஜயம் மேற்கொள்கின்றார்.