ராபர்ட் கிளைவும் இந்தியாவை கைப்பற்றலும்

ராபர்ட் கிளைவும் இந்தியாவை கைப்பற்றலும்

வினோத் மூனசிங்க

2002 ஆம் ஆண்டு BBC நடாத்திய கருத்துக் கணிப்பில், அதன் "மாண்புமிகு பிரித்தானியர்கள்" என்ற தொலைக்காட்சி தொடருடன், பெரும்பாலான பார்வையாளர்கள் போர்க்கால பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சிலை "மாண்புமிகு பிரித்தானியர்" என்று கருதினர்.

பிரித்தானியப் பேரரசு தோல்வியின் வாசலில் நின்றபோது பரபரப்பான பேச்சுக்களை நிகழ்த்தியதால் தான் அவரது புகழ் ஓங்கியிருந்தது.

ஆயினும் கூட, மார்கரெட் தாட்சருக்கு முன்பு எந்வொரு பிரிட்டிஷ் தலைவரின் எந்தவோர் நடவடிக்கையையும் விட அவரது அமெரிக்க சார்பு கொள்கைகளும் காலனித்துவ நீக்கத்திற்கான வளைந்து கொடுக்காத எதிர்ப்பும் பிரிட்டனின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

ஹிட்லரை அவர் சமாதான காலத்தில் புகழ்வதும், நாஜி யூத எதிர்ப்புக்கு யூதர்கள் மீது குற்றம் சாட்டுவதும், பிரிட்டிஷ் மக்களிடம் அல்லாமல், பேரரசு என்ற எண்ணக்கரு மீதான அவரது விசுவாசத்தைக் காட்டுகிறது.

அத்தகைய இனவெறியான, ஏகாதிபத்திய மதவெறியரின் தெரிவு நவீன பிரிட்டிஷ் வரலாறு மற்றும் ஊடகங்களின் சக்தி பற்றி அதிகமாக கூறுகிறது.

பதிலளித்தவர்கள் ஒன்பதாவது இடத்தில் ப்ரோண்டேயின் பிரபு ஹோராஷியோ நெல்சனையும் தேர்ந்தெடுத்தனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் ஆங்கிலேய தேசியப் பெருமையின் பக்கங்களை நீண்ட காலமாக அலங்கரித்த அட்மிரல், 1805ஆம் ஆண்டு டிராஃபல்கர் கடற்படைப் போரில் தனது மரணத்திற்குப் பிந்தைய வெற்றியின் மூலம் நூற்றாண்டு கால Pax Brittanica இற்கு அடித்தளம் அமைத்தார்.

1815ஆம் ஆண்டு வாட்டர்லூ போரில் நெப்போலியன் போனபார்டேவை தோற்கடித்த அவரது சமகாலத்தவரான வெலிங்டன் பிரபுவான ஆர்தர் வெல்லஸ்லி, பிரிட்டனின் 99 ஆண்டுகளை "ஏக வல்லரசாக" ஆரம்பித்தாலும், முதல் பத்து இடங்களுக்குள் வரவில்லை.

அஸ்ஸேக்கான பிளாசி

நெல்சன் மற்றும் வெலிங்டனின் வெற்றிகள் இல்லாமல், சர்ச்சில் மிகவும் கடுமையான மற்றும் பொருத்தமற்ற வகையில் பின்பற்றிய பிரிட்டிஷ் பேரரசு இருந்திருக்காது, குறைந்தபட்சம் அது இருந்த வடிவத்தில் இருந்திருக்காது.

ஒரு பிரிட்டிஷ் நிறுவனம் டிராஃபல்கர் சதுக்கத்தில் பெயரிடப்பட்ட, 46-மீற்றர் நெடுவரிசையில் நெல்சனின் நினைவாக 5.5 மீற்றர் சிலையையும்; வெலிங்டன் கிரீன் பார்க்கில் மிகப்பெரிய ரோமானஸ்க் வெலிங்டனின் வளைவையும் உருவாக்கி நன்றியறிவித்துள்ளது (இரண்டும் லண்டனில் உள்ளன).

ஆனால் இந்த வெற்றிகள், பிபிசியின் 100 நபர்களின் பட்டியலில் இடம்பெறாத, அறியப்படாத ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் (EEIC) ஆணையாளரான லெப்டினன்ட் ராபர்ட் கிளைவ் இல்லாமல் சாத்தியமில்லை.

பிரித்தானியப் பேரரசின் உண்மையான நிறுவனர் என்று கிளைவ் கருதப்பட்டிருக்க வேண்டும். பிளாசி (பலாஷி) போரில் பிரெஞ்சு செல்வாக்கு பெற்ற வங்காளத்தின் மொகுல் நவாப் சிராஜ் உத் தௌலாவை தோற்கடித்ததற்காக அவர் பின்னர் இந்தியாவின் கிளைவ் பிரபுவாக ஒரு ஐரிஷ் பிரபுத்துவத்தை பெற்றதுடன், புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் கே.எம். பன்னிகரால் இது ஒரு பரிவர்த்தனையின் மூலம் வங்காளத் தளபதிகள் நவாப்பை கிழக்கிந்திய கம்பெனிக்கு விற்ற "ஒரு பரிவர்த்தனை, ஒரு போர் அல்ல” என விபரிக்கப்பட்டது.

இந்த 1757 வெற்றியானது இந்தியாவின் தலைவிதியை முடிவுறுத்தியது, இருப்பினும் EEIC பல பின்னடைவுகள், பல சிக்கல்களைக் கொண்டிருந்தாலும், துணைக்கண்டத்தின் மீதான அதியுயர்வுக்கான பயணத்தில் 1803 அஸ்ஸே போரில் மராத்தா கூட்டமைப்பை வெலிங்டன் தோற்கடித்ததன் மூலம் இது அடையப்பட்டது.

இருப்பினும், பிளாசியின் முக்கியத்துவத்தை மறுக்க முடியாது. 18 ஆம் நூற்றாண்டின் போது, இந்தியா சீனாவை கூட விஞ்சி உலகின் பணக்கார நாடாக இருந்திருக்கலாம் என்பதுடன், உலகின் தொழிற்துறை உற்பத்தியில் 25% கொண்டிருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது; பிரிட்டன் வெறும் 2% மட்டுமே கொண்டிருந்தது. பிரிட்டனின் கையகப்படுத்தலானது "கிரீடத்தில் உள்ள ஆபரணத்தை" விட "கிரீடத்தையே" உருவாக்கியதெனலாம்.

பொருளாதார வல்லுனர் உத்சா பட்நாயக், ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்குரிய தரவுகளை மீளாய்வு செய்ததுடன், 1765 மற்றும் 1938 க்கு இடையில் பிரித்தானியர்கள் இந்தியாவிலிருந்து சுமார் 45 டிரில்லியன் அமெரிக்க டொலர் செல்வத்தை பிரித்தெடுத்தனர் (கார்ல் மார்க்ஸ் இதனை "நாகரீகத்திற்கு முந்தைய குவிப்பு" என குறிப்பிடுகிறார்) இது ஐக்கிய இராச்சியத்தின் தற்போதைய GDP இன் 17 மடங்குக்கு சமமானதாகும்.

பொருளாதார வரலாற்றாசிரியர்  அன்கஷ் மடிசனின் கருத்துப்படி, இந்த செயன்முறை இந்தியாவை ஏழ்மைப்படுத்தியது, அதன் உலக GDP பங்கினை 1700 இல் 27% இலிருந்து 1950 இல் 3% ஆகக் குறைவடையச் செய்தது. இந்தச் செல்வமும் மேற்கிந்தியத் தீவுகளில் அடிமைத் தொழிலாளரின் செல்வமும் சேர்ந்து, “உலகின் பட்டறையான” பிரிட்டனை உருவாக்கியதுடன் மேலும் பல போர்களை நடத்துவதற்கான ஆதாரத்தை வழங்குகிறது.

குறைவான பின்தள்ளல் நிலை

பிளாசிக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முன்னுரை இருந்தது. முகலாயப் பேரரசு, இறுதி வீழ்ச்சியில், அதன் தெற்கு இராச்சியங்களின் கட்டுப்பாட்டை இழந்தது. பெயரளவில் மொகலாயரின் கீழ்படிந்தவரான, ஹைதராபாத் நிஜாம் ஹைதராபாத்தை மையமாகக் கொண்ட ஆதிக்கங்களை ஆட்சி செய்தார். மற்றொரு, கர்நாடக நவாப், சட்டப்பூர்வமாக நிஜாமின் துணை, கிழக்கு கடற்கரையில் ஆட்சி செய்தார்.

1749 ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்களின் கூட்டாளரான முஹம்மது அலி கான் வாலாஜா நவாப் ஆனார், ஆனால் முந்தைய நவாப்பின் உறவினரும் பிரெஞ்சு கூட்டாளருமான சந்தா சாஹிப் (ஹுசேன் தோஸ்த் கான்) அவரைத் தோற்கடித்ததுடன், அவர் திருச்சிராப்பள்ளியில் (“திருச்சி”) தஞ்சம் புகுந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சந்தா சாஹிப் அங்கு வாலாஜாவை முற்றுகையிட்டார்.

EEICக்கான வாய்ப்புகள் மிகவும் மோசமாக இருந்தன. இந்தியாவில் வர்த்தகம் செய்யும் பல ஐரோப்பிய சக்திகளில் ஒன்று மட்டுமே என்பதுடன் அது மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் கடலூர் ஆகிய நான்கு துறைமுகங்களில் இயங்கியதுடன், அதன் நிலையைத் தக்கவைக்க உள்ளூர் ஆட்சியாளர்களுடனான கூட்டணியை நம்பியிருந்தது. மும்பையில் மட்டுமே அதன் பிடி பாதுகாப்பாக இருந்தது. 1746 இல் பிரெஞ்சுக்காரர்கள் மெட்ராஸைக் கைப்பற்றி கடலூரையும், பின்னர் கொல்கத்தாவையும் முற்றுகையிட்டனர்.

இந்த ஆங்கிலேய வர்த்தகத்தை ஒரு ஐரோப்பிய சமாதானம் மட்டுமே காப்பாற்றியது. நிறுவனத்தின் பணிப்பாளர்கள் தென்னிந்தியா முழுவதையும் வளர்ந்து வரும் செல்வாக்கால் பிரிட்டிஷாருக்கு அபாயத்தை ஏற்படுத்திய பிரெஞ்சுக்காரர்களிடம் கைவிட்டுவிடுவார்கள் என்று எதிர்பார்த்தனர். சந்தா சாஹிப் திருச்சியை கைப்பற்றியிருந்தால், பிரிட்டிஷ் இந்தியப் பேரரசு இருந்திருக்காது.

EEIC அதிர்ஷ்டம் மிகக் குறைந்த நிலையில், உயர்நிலைக்கு சென்ற கிளைவிற்கு அப்போது வயது வெறுமனே 26 தான். EEIC உடன் ஒரு "எழுதுநர்" (குமாஸ்தா) ஆக இணைந்துள்ளார், அவர் 1746 சென்னையை பிரெஞ்சு கைப்பற்றியதில் இருந்து தப்பிய பின்னர் கடலூரில் EEIC இராணுவத்தில் சேர்ந்தார்.

கடலூர் மீதான பிரெஞ்சு தாக்குதலை முறியடித்ததில் அவரது பங்கிற்கு அவருக்கு ஒரு கமிஷன் கிடைத்தது. புதுச்சேரியில் ("பாண்டி") பிரெஞ்சுக் கோட்டை முற்றுகையிடப்பட்ட காலத்திலும், தஞ்சாவூர் மீதான பிரிட்டிஷ் முயற்சியின் இழிவான தோல்வியிலும் அவர் தன்னை தனித்துவப்படுத்திக் கொண்டார். கம்பனி அவரை லெப்டினன்ட்டாக தரம் உயர்த்தியது.

ஆற்காடு

பசில் லிடெல் ஹார்ட்டின் கோட்பாடுகள் உண்மையாவதற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாக, கிளைவ் மறைமுக அணுகுமுறை உத்தியை ஆதரித்தார்.

திருச்சி முற்றுகையை மேற்கொள்ள அவரை கட்டாயப்படுத்துவதற்காக, சென்னையில் இருந்து சந்தா சாஹிப்பின் தலைநகரான ஆற்காட்டுக்கு ஒரு சிறிய படையை வழிநடத்துவதற்கு அவர் முன்மொழிந்தார்.

மெட்ராஸின் EEIC ஆளுநர் தாமஸ் சாண்டர்ஸ் அவருக்கு 200 ஐரோப்பிய மற்றும் 300 இந்திய துருப்புக்கள், மூன்று துப்பாக்கிகள் மற்றும் கமிஷனாக கப்டன் பதவியை வழங்கினார்.

ஐந்து நாட்களில், கிளைவின் அரை-பட்டாலியன் படை 111 கிலோமீற்றர் தூரம் அணிவகுத்து, கடுமையான இடியுடன் கூடிய மழையுடன், செப்டம்பர் 11, 1751 அன்று ஆற்காட்டை வந்தடைந்தது.

அவரது படையின் இருமடங்கு பலம் கொண்ட காரிஸன், இந்த சாதனையைக் கண்டு பிரமித்துப் போனது. கைவிடப்பட்ட கோட்டையை கிளைவ் விரைவாக ஆக்கிரமித்து, பாழடைந்த கோட்டைகளை சரிசெய்யத் தொடங்கினார்.

பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னரான ஜோசப் பிரான்சுவா டூப்ளே, திருச்சியை விரைவாகக் கைப்பற்றுவதில் கவனம் செலுத்துமாறு அவரது கூட்டாளரான சந்தா சாஹிப்பிற்கு அறிவுறுத்தினார். இருப்பினும், சாஹிப் தனது மருமகன் ராஜு சாஹிப்பை தனது 4,000 படைகளுடன் ஆற்காட்டை முற்றுகையிட அனுப்பினார்.

இந்த புரவலன், 7,300 இந்திய மற்றும் 120 பிரெஞ்சு துருப்புக்களுடன், துப்பாக்கிகள் மற்றும் யானைகளுடன் அக்டோபர் 4 அன்று ஆற்காடு நகரத்தை ஆக்கிரமித்து கோட்டையை ஆக்கிரமித்தார்.

இந்த வலிமைமிக்க இராணுவத்திற்கு எதிராக 52 நாட்களுக்கு கிளைவ்வின் சிறிய படை தாக்குப்பிடித்ததுடன், இறுதியில் ராஜு சாஹிப்பின் 18-பவுண்டர் துப்பாக்கிகளால் இடிந்து விழுந்த கோட்டைகளுடன் 200 க்கும் குறைவாக குறைவடைந்தது.

முற்றுகையின் கடைசி நாளில், ஆங்கிலேயர்கள் ஒரு பெரிய தாக்குதலை மேற்கொண்டதுடன், ஒரு மணி நேரத்தில் 12,000 குண்டுகளை சுட்டனர். மறுநாள் ராஜு சாஹிப் முற்றுகையை ஏற்படுத்தி விட்டு வேலூருக்குப் புறப்பட்டார்.

இந்த துணிச்சலான பாதுகாப்பு இந்தியாவின் கற்பனைகளைத் தூண்டியதுடன், மராத்தி ஜெனரல் முராரி ராவ் கோர்படே 6,000 வீரர்களுடன் பாதுகாவலர்களுக்கு உதவியதுடன், ராஜு சாஹிப்பின் பின்வாங்கல் கட்டாயப்படுத்தப்பட்டது.

இது EEIC இன் அதிர்ஷ்டத்தின் திருப்புமுனையைக் குறித்தது. கிளைவ் ஆற்காட்டைப் பாதுகாத்தமை, ஆர்னி போரில் ராஜு சாஹிப்பைத் தோற்கடித்தமையும் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றியமையும் அடுத்த ஏப்ரலில் திருச்சியை விடுவித்ததுடன் வாலாஜாவை நவாப்பாக மீண்டும் நிலைநிறுத்தவும் உதவியது.

இந்த வெற்றிகளை, அதிர்ஷ்டம் மற்றும் துரோகம் மற்றும் திறமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் மூலம் வென்றமை, துணைக் கண்டத்தில் இராணுவத் திறமைக்கான விலைமதிப்பற்ற நற்பெயரைக் கொடுத்தது.

அவர்கள் இல்லாமல், EEIC சிராஜ் உத் தௌலாவிடமிருந்து கொல்கத்தாவை மீண்டும் கைப்பற்றவோ அல்லது பிளாசியில் அவரை தோற்கடிக்கவோ முடியாது. சுருக்கமாக, ஆற்காட்டில் கிளைவ் பெற்ற வெற்றி, ஆங்கிலேயர்களுக்கு அவர்களின் இந்தியப் பேரரசை நிறுவ உதவியது:

இந்தத் தலைப்பு ஏகாதிபத்திய ஏக்கத்தைப் பிரதிபலிக்கும் வரை, எந்தவொரு "மாண்புமிகு பிரித்தானியர்கள்" பட்டியலிலும் அவரை முதலிடத்தில் வைக்க வேண்டும்.

வினோத் மூனசிங்க வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியலை கற்றதுடன், இலங்கையில் தேயிலை இயந்திரங்கள் மற்றும் மோட்டார் உதிரிபாகங்கள் மற்றும் ரயில்வே துறைகளில் பணியாற்றினார்.

பின்னர் அவர் பத்திரிகை துறை மற்றும் வரலாறுகளை எழுதுவதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இலங்கை ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தின் ஆளுனர் குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.