பொது மக்கள் சந்திப்பு நாளாக திங்கள் மாற்றம்

பொது மக்கள் சந்திப்பு நாளாக திங்கள் மாற்றம்

அரசாங்க அலுவலகங்களின் பொதுமக்கள் சந்திப்பு தினமாக திங்கட்கிழமை மாற்றப்பட்டுள்ளது.

முன்னர், பொதுமக்கள் சந்திப்பு தினமாக புதன்கிழமை காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று (09) புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தினத்தில் மாற்றத்தினை மேற்கொள்ளவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று (10) வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.