பிராந்திய ஊடகவியலாளர்கள் மீது கடத்தல் கும்பல் தாக்குதல்

பிராந்திய ஊடகவியலாளர்கள் மீது கடத்தல் கும்பல் தாக்குதல்

முல்லைத்தீவு மாவட்டத்தினைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர்கள் இருவர் மீது கடத்தல் கும்பலொன்றினால் இன்று (12) திங்கட்கிழமை தாக்குதலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்டவிரோதமாக தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு இரகசியமாக இடம்பெறும் திருட்டு தொடர்பில் உண்மைத்தன்மையினை வெளிப்படுத்துவதற்காக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தவர்களே தடிகள் மற்றும் பொல்லுகளுடன் சுற்றிவளைத்து ஊடகவியலாளர்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.

குறித்த ஊடகவியலாளர்களிடம் இருந்த பணம், தங்கச் சங்கிலி ஆகியவற்றை கடத்தல் கும்பல் கைப்பற்றியுள்ளதுடன் ஊடகவியலாளர்களிடம் இருந்த கமெராக்களை பறித்து அவர்களிடமிருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பறித்து எடுத்துள்ளனர்.

முறிப்பு புகுதியில் தொடர்சியாக காடழிப்பு மற்றும் தேக்குமரங்கள் சட்டவிரோதமான முறையில் கடத்தப்படுவதாக மக்கள் தெரிவித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.