அக்சிஸ் பாங்க் லிமிடெட்டின் வங்கி உரிமம் இரத்து

அக்சிஸ் பாங்க் லிமிடெட்டின் வங்கி உரிமம் இரத்து

அக்சிஸ் பாங்க் லிமிடெட் - இந்தியாவிற்கு வழங்கப்பட்ட உரிமத்தினை இரத்துச் செய்ய இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது.

அக்சிஸ் பாங்க் லிமிடெட் - இந்தியா, அதன் உலகளாவிய செயற்பாடுகள் குறித்து 2019இல் கொள்கைத் தீர்மானத்தமொன்றினை மேற்கொண்டிருந்தது.

இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையைப் பரிசீலித்து பல நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு இலங்கையிலுள்ள அக்சிஸ் பாங்க் லிமிடெட்டின் வணிக நடவடிக்கைகளை முடிவுறுத்துவதற்கும் 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித் தொழில் சட்ட விதிகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட உரிமத்தினையும் இரத்துச் செய்வதற்கும் மத்திய வங்கியின் நாணயச் சபை  ஒப்புதல் வழங்கியது.

நாணயச் சபையினால் விதிக்கப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கமைவாக அக்சிஸ் வங்கி லிமிடெட்டின் செயற்பாட்டின் மீது வங்கி மேற்பார்வைத் திணைக்களப் பணிப்பாளர் திருப்தியடைவதனால் அக்சிஸ் வங்கி லிமிடெட்டிற்கு வங்கித்தொழில் வியாபாரத்தினைக் கொண்டு நடாத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த உரிமம் 2020 ஒத்தோபர் 30 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இரத்துச் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.