இலங்கை வருகிறார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்

இலங்கை வருகிறார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரான MOTEGI Toshimitsu எதிர்வரும் 12 – 14ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உள்ளிட்டோரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவினை மேம்படுத்தும் நோக்கிலும், புதிய அரசாங்கத்துடனான ஜப்பானின் உறவினை வளர்க்கும் வகையிலும் அவரின் இந்த விஜயம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரும் இலங்கை வருகின்றார்.