சொத்துப் பிரகடனங்களை வெளியிடுமாறு எம்.பிக்களிடம் TISL கோரிக்கை

சொத்துப் பிரகடனங்களை வெளியிடுமாறு எம்.பிக்களிடம் TISL கோரிக்கை

2020/2021ஆம் ஆண்டிற்கான தங்களின் சொத்து பிரகடனங்களை பகிரங்கமாக வெளியிடுவதன் மூலம் நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதற்கு முன்வருமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனம் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தலில் பொறுப்புக்கூறல் கலாச்சாரத்தை நோக்கி ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை குறிக்கும் வகையில், தங்கள் சொத்து பிரகடனங்களை ஏகமனதாக  பொது தளத்தில் வெளியிட முன்வந்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த, முன்னாள் பாராளுமன்றத்தின் 12 உறுப்பினர்கள் வெளியிட்ட முன்மாதிரியைப் பின்பற்றுமாறு இலங்கையின் ஏனைய பொது பிரதிநிதிகளிடமும் TISL நிறுவனம் வேண்டுகோள் விடுக்கின்றது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும் தங்கள் சொத்து விபரங்களை பகிரங்கமாக வெளியிடுவதன் மூலம் இந்த  செயற்பாட்டில் இணையுமாறு  TISL அழைப்பு விடுக்கின்றது.

இந்த ஆண்டு பெப்ரவரியில் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு, பாராளுமன்றத்திற்கு எதிரான சாமர சம்பத் என்பவரின் மேன்முறையீட்டில் 2010 முதல் 2018 வரையான காலப்பகுதியில் தங்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த பிரகடனங்களை ஒப்படைத்த எம்.பி.க்களின் பட்டியலை உடனடியாக வெளியிடுமாறு பாராளுமன்றத்திற்கு உத்தரவிட்டது.

அதேபோல, சொத்துக்கள் பிரகடன வெளிப்படைத்தன்மை குறித்து ஊடகவியலாளர்களைப் போன்று ஏனைய சிவில் செயற்பாட்டாளர்களின் ஈடுபாடானது TISLக்கு மேலும் உற்சாகமளிப்பதற்கான காரணமாக உள்ளது.

கடந்த காலங்களில், TISL நிறுவனம் இலங்கை அமைச்சரவை அலுவலகத்திலிருந்தும் இதே போன்ற தகவல்களைக் கோரியபோது, அந்தத் தகவல் எந்தவித தயக்கமுமின்றி வெளியிடப்பட்டது.

2017 ஆம் ஆண்டில் இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட  முதல் நாள் தகவல் அறியும் விண்ணப்பங்களில் ஒன்றாக, சொத்துக்கள் பொறுப்புக்கள் பிரகடனம் தொடர்பான விண்ணப்பத்தை  TISL நிறுவனம்  சமர்ப்பித்திருந்தது.

அப்போதும், தகவல் அறியும் ஆணைக்குழு அதனை வெளியிடுவதற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது/ ஜனாதிபதி செயலகம் அப்போதைய பிரதமரின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பிரகடனத்தை TISL நிறுவனத்திற்கு வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தது.

தகவல் அறியும் ஆணைக்குழுவின் இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க முடிவானது, 225 எம்.பி.க்கள் அனைவரும் ஏகமனதாக தமது  சொத்து பிரகடனத்தை பகிரங்கமாக மேற்கொள்ளும் ஒரு வெளிப்படை ஜனநாயகத்திற்கான அவர்களின் உறுதிப்பாட்டிற்கு  ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

RTI  ஆணைக்குழுவின் அண்மைய கால முடிவின் அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் 2021 ஜூன் 30ஆம் திகதிக்குள் தங்கள்  சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பிரகடனங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கும் அதேவேளை, தங்களின் சொத்து அறிவித்தலை பகிரங்கமாக வெளியிடுவதன் மூலம்  பொறுப்புக்கூறுவதற்கு முன்வர வேண்டும் என TISL  நிறுவனம்  அழைப்பு விடுக்கின்றது.    

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சகல பிரதிநிதிகளும் ஏற்கனவே இந்த நடவடிக்கையை முன்னெடுத்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து  தங்கள் சொத்து பிரகடனங்களை பொதுத் தளத்தில் பகிரங்கமாக வெளியிடுவார்கள் என்று TISL நிறுவனம்  நம்புகிறது.

ஏற்கனவே வெளியிடப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை பார்வையிட