மு.கா எம்.பிக்களின் அதிரடி நடவடிக்கையினால் சம்மாந்துறை பஸ் டிப்போவினை மூடும் நடவடிக்கை கைவிடல்

மு.கா எம்.பிக்களின் அதிரடி நடவடிக்கையினால்   சம்மாந்துறை பஸ் டிப்போவினை மூடும் நடவடிக்கை கைவிடல்


அபு ஹின்ஸா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் அதிரடி நடவடிக்கையினாலும் அழுத்தம் காரணமாகவும் சம்மாந்துறை பஸ் டிப்போவினை மூடும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றனது.
சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ வேறு இடத்திற்கு மாற்றப்படவுள்ளதாக செய்திகள் கடந்த வாரம் வெளியாகின.
இதனையடுத்து இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்எம்.எம்.ஹரீஸ், பைசால் காஸிம் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் அவருடைய அலுவலகத்தில் அவரை சந்தித்து குறித்த செயற்பாட்டினை நிறுத்தமாறு தெரிவித்தனர்.
இதனையடுத்தே இந்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பு தொடர்பில் ஸ்ரீலங்;கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இந்;த டிப்போவை தற்போதுள்ள இடத்திலேயே நிரந்தரமாக இருக்கச்செய்ய நடவடிக்கை எடுக்கும் நோக்கில் எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவை சந்தித்தது கலந்துரையாடினோர்ம்.
சம்மாந்துறை பிரதேசத்தில் அந்த டிப்போவின் தேவைகள் பற்றியும், மிகப் பெரிய பிரதேசமான சம்மாந்துறைக்கு அந்த டிப்போ இருப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் தொடர்பிலும் விரிவாக இதன்போது அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க இந்த டிப்போவை மூடி அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யும் தனது நிலைப்பாட்டை கைவிடுவதாக உறுதியளித்தார்.
மேலும் டிப்போவை மூடி அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யும் நிலைப்பாட்டை ரத்து செய்துள்ள விடயத்தை அமுல்படுத்தி அந்த டிப்போவை மேலும் அபிவிருத்தி செய்ய  உரிய நடவடிக்கைகளை எடுக்க இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அத்துடன் எதிர்வரும் மார்ச் மாதம் மூன்றாம் திகதி இந்த டிப்போவின் அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தலைமையிலான குழுவொன்று கள விஜயம் செய்ய உள்ளது' என்றார்.
இந்த விடயம் தொடர்பில் அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸை சம்மாந்துறை மஜ்லிஸ் ஷுரா அமைப்பினர் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.