பாக். சர்வதேச இணையத்தள வர்த்தக கண்காட்சி - 2021
பாகிஸ்தான் வர்த்தக அமைச்சின் அனுசரணையில் பாகிஸ்தானின் வர்த்தக மேம்பாட்டு ஆணையம், கொவிட் -19 ஐ கருத்தில் கொண்டு , பாகிஸ்தானின் முதல் இணையத்தள வர்த்தக கண்காட்சியை எதிர்வரும் பெப்ரவரி 01 முதல் 05 வரை நடத்தவுள்ளது.
இவ்விணையத்தள கண்காட்சியானது 24 மணி நேரமும் செயல்படும். இதனால் உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் நாட்டு நேர மாற்றங்களுக்கு ஏற்ப தமது அலுவகங்கள் மற்றும் வீடுகளிலிருந்தவாறே கலந்துகொள்ள முடியும்.
பாகிஸ்தானின் தரமான ஆடை உற்பத்தியினை காட்சிப்படுத்தும் நோக்கத்துடன் வீட்டு ஆடைகள், உயர்நிலை பேஷன் ஆடைகள், துணிகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள்.ஆகியவை இக்கண்காட்சியில் அடங்கும்.
இக்கண்காட்சியானது, பாகிஸ்தானிய உற்பத்தியாளர்களுடன் சர்வதேச நுகர்வோர்களை வீடியோ மற்றும் ஆடியோ தொழில்நுட்பம் மூலம் ஒன்றிணைக்கும். டிஜிட்டல் வணிக பரிமாற்றம், கண்காட்சி குழுவினருடன் நேரடியாக தொடர்புகொள்ளும் திறன் மற்றும் வீடியோ மற்றும் புகைப்பட தொழில்நுட்பம் மூலம் அனைத்துவகையான உற்பத்திப்பொருட்களையும் விரிவாகக் காண்பித்தல் போன்ற மேலும் பல அம்சங்கள் இக்கண்காட்சியில் அடங்கும்.
மேலும், உலகளாவிய ஆடை உற்பத்தி சந்தையில் முக்கிய போக்குகளை தெளிவுபடுத்திடும் ஆடை உற்பத்தித்துறை மற்றும் பேஷன் ஷோக்கள் பற்றிய தகவல் கருத்தரங்குகளும் இதில் நடைபெறும். இலங்கை நுகர்வோர்கள், ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இந்த லிங்கின் மூலம் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.
Comments (0)
Facebook Comments (0)