பாலின வேறுபாட்டு அடிப்படையிலான வன்முறைக்கு தீர்வுகாண நடவடிக்கை!

பாலின வேறுபாட்டு அடிப்படையிலான  வன்முறைக்கு தீர்வுகாண நடவடிக்கை!

கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் மற்றும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் ஆகியன இணைந்து பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு எதிரான பாலியல் மற்றும் பாலின வேறுபாட்டு அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிராக மன்னார் மாவட்டத்தில் உள்ள சமூகங்களை வலுப்படுத்துவதற்கான புதியதொரு கூட்டு முயற்சியை அறிவித்துள்ளன.

கடந்த செப்டெம்பர் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சித் திட்டம், வன்முறையின்மை மற்றும் பாலின பாரபட்சமற்ற உறவுகள் மற்றும் பாலின பாரபட்சமற்ற மனப்பாங்கினை சிறுவர்கள் கடைபிடித்தல் என்பவற்றுக்கு குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் ஒத்துழைப்பு வழங்குவதற்கான முறையான படிப்படியான மாற்றங்கள் தொடர்பாக தீர்வு காணும்.

பன்முகப்படுத்தப்பட்ட ஓர் அணுகுமுறையானது பெண்களை வருமானம், பாலியல் மற்றும் பாலின வேறுபாட்டு அடிப்படையிலான வன்முறைகளுக்கான பதில் நடவடிக்கை மற்றும் தடுப்பாக சேவை நிலையத்தின் அணுகலை பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு பெற்றுத்தருதல் தொடர்பாகவும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அவதானம் செலுத்துகின்றது.

பெண்கள் மற்றும் யுவதிகள் கொவிட் 19 தொற்றினால் ஒப்பிட முடியாதளவு பாதிப்படைந்துள்ளதோடு, இது பெண்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளையும் ஏற்படுத்தியுள்ளது.

1,000,000 அவுஸ்திரேலியா டொலர் மதிப்புமிக்க இந் நிகழ்ச்சித்திட்டம் UNFPA, UNICEF மற்றும் UN Women இனால் இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட காலம் (2021 – 2022) முன்னெடுக்கப்படும்.

'கொவிட் 19 தொடர்பான இலங்கையின் பதில் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளித்திட அவுஸ்திரேலியா அர்ப்பணிப்புடன் இருப்பதோடு, இலங்கை அரசானது ஒத்துழைப்பு மற்றும் சமூகங்களுக்கான தேவைகள் தொடர்பாக விடுத்த வேண்டுகோள்களுக்கு துரிதமாக செயற்பட்டிருந்தது.

முன்னுரிமைகளை இனங்காண்பதற்கும் பதில் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கும் ஐ.நா முகவர் அமைப்புகள் மற்றும்  உள்ளுர் தரப்பினருடன் நாம் இணைந்து கொண்டுள்ளோம்.

பாலின வேறுபாட்டு அவதானமிக்க எமது கொவிட் 19 முயற்சிகள் பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கும் பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்கும் ஒத்துழைப்பு வழங்க முயற்சிக்கிறது' என இலங்கைக்கான பதில் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் அமந்தா ஜூவெல் தெரிவித்தார்.

ஐநாவின் இணைந்த முயற்சிகள் பற்றி கருத்து தெரிவித்த ஐநாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் குறிப்பிடும் போது,

'ஓர் ஆண், பெண் ஒருவரை அடிப்பதற்கு அனுமதியளிக்கும் சூழ்நிலைகள் இருப்பதாக 26  சதவீதமான ஆண்களும் 38 சதவீதமான பெண்களும் நம்புவதாக கற்கைகள் தெரிவிக்கின்றன.

எமது நிகழ்ச்சித்திட்டம் பெண்கள் மற்றும் யுவதிகள் தொடர்பான இத்தகைய பாலின சமத்துவமின்மைகள் மற்றும் பாரபட்ச சமூக வழக்கங்களுக்கு தீர்வுகாக முயற்சிக்கும்.

இத்தகைய தீங்கான மனப்பாங்குகளின் தொடர்ச்சியான விளைவுகள் கொவிட் 19 காரணமாக கூட்டிணைந்துள்ளதோடு, ஆண்கள் மற்றும் இளைஞர்களுடன் பார்க்கையில் அளவற்ற பாதிப்புகளை பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு ஏற்படுத்தவிருப்பதோடு, பேரிடர் காலத்தின் தொடர்ச்சியான விளைவுகளில் இருந்தான பெண்களின் மீளெழுச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தவுள்ளது.

அதனால், பாரபட்சமான மற்றும் நியாயமான சமூகங்களை மீளக் கட்டியெழுப்பும் தேவைகளுக்கு தீர்வுகாணும் ஒழுங்கமைப்புகள் மேற்கொள்ளப்படும்'  என்றார்.

குடும்ப வன்முறை தொடர்பாக கொவிட் 19 தொற்றுநோய் ஏற்படுத்தும் மோசமான விளைவுகளைப் பற்றி UNFPA இலங்கை பிரதிநிதி ரிட்சு நகேன் கூறும்போது,

'கொவிட் 19 அடைப்பு நடவடிக்கைகளால், குடும்ப வன்முறை காரணமாக பெண்கள் மற்றும் யுவதிகள் உதவிப் பிரிவுகளுக்கு ஏற்படுத்தும் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை எம்மால் காணக் கூடியதாகவுள்ளது.

அவற்றுக்கு மேலதிகமாக, இடையூறுக்கு முகங்கொடுக்கும் நோக்கில் சுகாதார சேவைகள் நீடிக்கப்பட்டிருப்பதால், பெண்களுக்கான புகலிடங்களும் தமது அதிகபட்ச அளவை எட்டியுள்ளன. இத் தொற்றுநோய் தொடரும்போது இவ் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதோடு, பெண்களின் மனநலம் மற்றும் நல்வாழ்வு, அவர்களது பாலியல் மற்றும் இனப்பெருக்கச் சுகாதாரம் மற்றும் இனப்பெருக்க உரிமைகள், மற்றும் இவ் இடையூறில் இருந்து மீட்சி பெறுவதற்கான அவர்களது இயலுமை என்பவற்றிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்'  என்றார்.

குடும்பங்களின் மீது கொவிட் 19 பாரியதொரு அழுத்தத்தை பிரயோகித்தாலும், தொற்றுநோய் காலத்திற்கு முன்பிருந்தே அநேகமான சிறுவர்கள் தமது வீடு உள்ளடங்கலாக, வன்முறை, துஷ்பிரயோகம் மற்றும் அலட்சியத்தை நேரடியாகப் பார்க்கும் அல்லது அனுபவிக்கும் நிலையே காணப்படுகிறது.

இவ் வன்முறையானது, தொடர்புடைய சிறுவர்கள், அவர்களது சமூகங்கள் மற்றும் மொத்தத்தில் முழு நாட்டிற்கும்  நீண்டகால பௌதிக மற்றும் உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை நாம் அறிவோம்.  அதனால்தான் இச் செயற்பாடு முக்கியத்துவம் பெறுகின்றது.

'கொவிட் 19 காலத்திலும் அதன் பின்னரும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைக்கு தீர்வுகாண தனது சக்திக்குட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் UNICEF முன்னெடுக்கும், அதனால் ஒவ்வொரு சிறுவனும், சிறுமியும் பாதுகாப்பாக வளரவும் வாழவும் முடிவதோடு, தமது முழு ஆற்றலையும் வெளிப்படுத்த முடியும்' என UNICEF இலங்கைப் பிரதிநிதி டிம் சட்டன் தெரிவித்தார்.

இலங்கை ஐ.நா பெண்களின் இலங்கை பிரதிநிதி ரமாயா சல்காதோ மேலும் குறிப்பிடுகையில்,

'இத்தொற்றுநோயால் பெண்கள் அளவிட முடியாதளவு பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளார்கள். தமது குடும்பங்களை பராமரிக்கும்போது இரு மடங்கு வேலைப்பளுவையும் அத்துடன் ஏனைய பொறுப்புகளையும் (தொழில்சார்ந்த மற்றும் ஏனைய) முன்னெடுக்கும் கடப்பாடு அவர்களுக்கு உள்ளது.

மேலும், அடைப்பு நடவடிக்கைகள் காரணமாக வீட்டிலேயே தடுத்து வைக்கப்படுதல் குடும்ப வன்முறைக்கு உள்ளாகுபவர்களை மேலும் மோசமாக பாதிக்கிறது. ஏனெனில், அவர்களால் வழமையான வழிமுறைகளின் ஊடாக ஒத்துழைப்புகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிட்டுவதில்லை.

சமூக பொருளாதார ஆற்றல் அபிவிருத்தி தொடர்பாக சரியான நேரத்தில் அவதானம் செலுத்தும் இத் திட்டமானது பெண்கள் மற்றும் யுவதிகள் முகங்கொடுக்கும் வன்முறைக்கு எதிரான செயற்திறன் மிக்கதொரு தடுப்பாக அமைவதோடு, பெண்கள் மீளெழுச்சி பெற்று வன்முறையின் மோசமான சக்கரங்களை உடைத்து வெளியேறும் ஆற்றலையும் வழங்கும் என ஐநா பெண்கள் நம்புகிறது' என்று குறிப்பிட்டார்.

இந் நிகழ்ச்சித்திட்டமானது மன்னார் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு ஏதுவான காரணிகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதோடு, அடைப்பு காலத்தில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெண்களுக்கான புகலிடங்களை அணுக முடிவதை உறுதிசெய்வதற்கும் ஒத்துழைப்பு வழங்கும். பெண்கள் தமது தெரிவுகளை செயற்படுத்தவும் தமது நிதிச் சுதந்திரத்தை ஊக்குவிக்கும் வேலைவாய்ப்புகளில் பங்கேற்பதை உறுதி செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நிகழ்ச்சித்திட்டத்திற்கு பிந்தைய செயற்பாடுகளும் முறையான மெய்யான மாற்றங்களை ஊக்குவிக்கவுள்ளன, உதாரணமாக பாலின பாரபட்சமற்ற பிரஜைகளாக இருப்பதற்கான அறிவினை சிறுவர் மற்றும் வயது குறைந்தோருக்கு வழங்கும் கற்கை நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்கமைத்தல் என்பன இதில் உள்ளடங்கும்.

2013 ஆம் ஆண்டு இலங்கையில் ஆண்மை குறித்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பங்காளர்களால் முன்னெடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், 'ஓர் ஆண், பெண் ஒருவரை அடிப்பதற்கு அனுமதியளிக்கும் சந்தர்ப்பங்கள் அல்லது சூழ்நிலைகள் இருக்கின்றன' என 26 சதவீதமான ஆண்களும் 38 சதவீதமான பெண்களும் நம்புவதாக தெரிய வந்துள்ளது. 2012 உலகச் சிறுவர் நிலை அறிக்கையின் படி இலங்கையிலுள்ள 54 சதவீதமான வயது குறைந்த யுவதிகள் மனைவியை அடிப்பதை நியாயப்படுத்துகின்றனர்.

ஐக்கிய நாடுகள், இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களுடன் இணைந்து எந்த ஒருவரையும் புறந்தள்ளாத நிலைபேறான அபிவிருத்தி நிரலொன்றில் கவனம் செலுத்துகின்றது. கூட்டாகவும் தனது சிறப்பு முகவர் அமைப்புகள், நிதிகள், நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் அலுவலகங்கள் ஊடாகவும் நிலைபேறான மற்றும் உள்ளீர்ப்பான பொருளாதார அபிவிருத்தியை எட்டுவதற்கும், இதன்போது தரமான சமூக சேவைகளுக்கு சமத்துவமான அணுகல், வலுவூட்டப்பட்ட மனித இயலுமைகள், மனித உரிமைகள் மற்றும் சமூக ஒட்டிணைவு என்பவற்றை கைக்கொள்வதற்கும் இலங்கை அரசாங்கத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க முயற்சிக்கிறது.