சஜித் பிரேமதாசவின் வெளிவிவகார ஆலோசகராக தயான் நியமனம்

சஜித் பிரேமதாசவின் வெளிவிவகார ஆலோசகராக தயான் நியமனம்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் வெளிவிவகார ஆலோசகராக கலாநிதி தயான் ஜயதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் எதிர்;க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் இன்று (05) செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மதும பண்டார, கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் ஈரான் விக்ரமதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதுவராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.