தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் 138 முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு

தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் 138 முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழுவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட 10 அரசியல் கட்சிகளிடமிருந்து முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குழுவின் தலைவர், சபை முதலாவரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று (14) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அந்தக் குழுவின் கூட்டத்தின் போது தெரிவித்தார்.

முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட காலம் ஜூலை 15 ஆம் திகதியுடன் நிறைவடைவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதுவரை 138 முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் குழுவுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாக குழுவின் செயலாளர், பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனத்தீர இதன்போது தெரிவித்தார்.