தீகவாபி புனரமைப்பு நிதியம் அங்குரார்ப்பணம்

தீகவாபி புனரமைப்பு நிதியம் அங்குரார்ப்பணம்

தீகவாபி புனரமைப்பு நிதியம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (12) வெள்ளிக்கிழமை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

புத்தசாசன சமய விவகார அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்குபற்றலுடன் கொழுப்பில் உள்ள சம்போதி விகாரையில் இடம்பெற்ற நிகழ்வின் போதே இந்த நிதியம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இதன்போது விமானப் படை, இராணுவம் என பலர் தீகவாபி விகாரையை புனரமைக்க ஜனாதிபதியிடம் நிதி பங்களிப்பை வழங்கினர். தீகவாவி விகாரையை புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டத்திற்காகவே இந்த நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த விகாரை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக "www.deegawapiya.lk" எனும் இணையத்தளமும் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.  

"தீகவாபியை புனரமைக்கப்பட்டு எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் மக்களிடம் கையளிக்கப்படும்" என இந்த நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுப்பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன கூறினார்.

பாதுகாப்பு செயலாளரும், கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ ஜனாதிபதி செயலணியின் தலைவருமான ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவின் வழிகாட்டலில் இராணுவம், சிவில் பாதுகாப்பு படை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த விகாரையின் புனரமைப்பு பணிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.