கல்முனை பிராந்தியத்திற்கு இம்மாத இறுதிக்குள் தடுப்பூசி வழங்க நாமல் உறுதி

கல்முனை பிராந்தியத்திற்கு இம்மாத இறுதிக்குள் தடுப்பூசி வழங்க நாமல் உறுதி

கல்முனை சுகாதார பிராந்தியத்திற்கு இம்மாத இறுதிக்குள் 50,000 கொவிட் - 19 தடுப்பூசிகளை வழங்குவதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

கொவிட் - 19 தடுப்பூசி பங்கீட்டில் கல்முனை சுகாதார மாவட்டம் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. இந்த விடயம், கல்முனை பிராந்தியத்திலுள்ள சமூக ஆர்வளர்களினால் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்தே இம்மாத இறுதிக்குள் கல்முனை சுகாதார பிராந்தியத்திற்கு கொவிட் - 19 தடுப்பூசி வழங்கப்படும் என்ற உறுதிமொழியினை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வழங்கியுள்hர்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை வரும் தடுப்பூசிகள் ஏற்கனவே பங்கீடு செய்யப்பட்டமையினால், அடுத்து கட்டமாக இலங்கைக்கு வரும் தடுப்பூசி முன்னுரிமை அடிப்படையில் கல்முனை சுகாதார மாவட்டத்திற்கு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு இன்று (09) வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொவிட் தடுப்பூசி ஒதுக்கீட்டில் கல்முனை பிராந்தியம் தொடர்ச்சியாக புறக்கணிப்பு