இரசாயன உர இறக்குமதி தடையை நீக்க அரசாங்கம் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை

 இரசாயன உர இறக்குமதி தடையை நீக்க அரசாங்கம் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை

இரசாயன உரங்கள் மற்றும் பூச்சுக் கொல்லிகள் இறக்குமதிக்கான தடையை நீக்குவதற்கு அரசாங்ம் எந்தவித தீர்மானமும் இல்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.

இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"பசுமையான சமூக பொருளாதார மாதிரியினை கட்டியெழுப்பும் நோக்கில் இரசாயன உரங்கள ; மற்றும் பூச்சுக் கொல்லிகள் இறக்குமதி செய்வதை தடை செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானமானது, புதிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் மாற்றப்பட்டுள்ளது என சில இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் ஊடாக பரப்படுகின்றன.

இந்த செய்திகளில் எவ்வித உண்மை தன்மையும் இல்லை. இரசாயன உர பாவனைக்கு பதிலாக சேதன உரங்களை வேளாண்மையில் பயன்படுத்துவது தொடர்பில் வாதங்கள் மற்றும் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அவை அனைத்தையும் சரிசமமாக மதிப்பாய்வு செய்து மிகவும் சரியான செயன்முறையினை திட்டமிடுவதற்கு தேவையான 05 துணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன.

பசுமையான பொருளாதாரத்தினை உருவாக்கும் கொள்கையை மாற்றுவதற்கு இந்த கலந்துரையாடலின் போது எவ்வித யோசனையும் முன்வைக்கப்படவில்லை" என்றார்.