'முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகள் வழமை போன்று இன்றிரவு ஒலிபரப்பாகும்'

 'முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகள் வழமை போன்று இன்றிரவு ஒலிபரப்பாகும்'

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன (SLBC) முஸ்லிம் சேவையின் நிகழ்ச்சிகள் வழமை போன்று இன்று (17) செவ்வாய்க்கிழமை இரவு 8.00 மணிக்கு  ஒலிபரப்பாகும் என அதன் தலைவர் ஹட்சன் சமரசிங்க தெரிவித்தார்.

சுமார் 70 வருடங்கள் பழமை வாய்ந்த SLBC இன் தமிழ் தேசிய சேவை மற்றும் முஸ்லிம் சேவை ஆகியன நேற்று  (16) திங்கட்கிழமை மு.ப 11.30 மணி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சின் அனுசரனையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் 'விசன் எப்.எம்' எனும் கல்விச் சேவையொன்று இன்று (16) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த அலைவரிசைக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் தேசிய சேவையின்  102.1 அலைவரிசை ஒதுக்கப்பட்டமையினாலேயே தமிழ் தேசிய சேவை மற்றும் முஸ்லிம் சேவை ஆகியவற்றின் நிகழ்ச்சிகள் இடைநிறுத்தப்பட்டன.

இது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று இன்று (17) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது.

இதன்போது, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகள் வழமை போன்று அதே 102.1அலைவரிசைகளில் இன்று இரவு 08:00 மணி முதல் மீண்டும் ஒலிபரப்பாகும் என SLBC இன் தலைவர் ஹட்சன் சமரசிங்க அறிவித்தார்.

மீண்டும் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும் தான் போது விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்றிரவு முஸ்லிம் சேவை ஒலிபரப்பாகவில்லை