கழிவு முகாமைத்துவப் பிரச்சினையினை தீர்க்க பெண்களின் வகிபாகத்தை அதிகரிக்க நடவடிக்கை

கழிவு முகாமைத்துவப் பிரச்சினையினை தீர்க்க  பெண்களின் வகிபாகத்தை அதிகரிக்க நடவடிக்கை

இலங்கை பெண்கள் வீட்டுப் பணிகளின் பிரதானமான சுமையை சுமக்கிறார்கள், எனவே அவர்கள் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல் பல்வேறு சமூகங்களுக்கிடையே சச்சரவுகளை ஏற்படுத்துகிற சமூகத்தின் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான அறிவு மற்றும் செல்வாக்கைக் கொண்டுள்ளனர்.

2017ஆம் ஆண்டின் அரசாங்கத்தின் நேரப் பயன்பாட்டு கணக்கெடுப்பு, ஒவ்வொரு நாளும் வீட்டு வேலைகளைச் செய்வதற்கு ஆண்களை விட பெண்கள் 27.6 சதவிகித அதிக நேரத்தை செலவிடுவதாகக் கண்டறிந்துள்ளது.

இருப்பினும், அனைத்து வீட்டு கழிவுகளை பெண்கள் கையாளும் அதே வேளையில், பாரிய சமுதாயத்தில் கழிவுகளை எவ்வாறு முகாமைசெய்வது என்பதை தீர்மானிக்கும் போது அவர்களின் குரல் மிகக்குறைந்தளவிலேயே உள்ளது.

இலங்கையில், உள்ளூராட்சி நிறுவனங்கள் அல்லது சபைகள் தங்கள் பகுதிகளுக்குள் கழிவுகளை சேகரித்து அகற்றுவதற்கான முதன்மைப் பொறுப்பைக் கொண்டுள்ளன. ஆனால் வரலாற்று ரீதியாக, நிறுவன மற்றும் கட்டமைப்பு தடைகள் மற்றும் அரசியல் பெண்களுக்கு பொருத்தமற்றது அல்லது பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் போன்ற நிலையான பாலின உள எண்ணங்கள் காரணமாக மிகச்சில பெண்களே இந்த நிறுவனங்களில் இடம்பிடித்துள்ளனர்.

கடந்த உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்பு, 2018இல், பெண்கள் இந்த இடங்களில் 1.9 சதவீத்தை மட்டுமே கொண்டிருந்தனர். பெண் பிரதிநிதித்துவத்திற்கான புதிய 25 சதவிகித ஒதுக்கீடு அந்த எண்ணிக்கையை அதிகரித்தது.

இருப்பினும், இன்றும், பெண்கள் 23.7 சதவிகித இடங்களை மட்டுமே கொண்டிருக்கிறார்கள். பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் சுற்றுச்சூழல் முகாமைத்துவ பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக, ஐ.நா. பெண்கள் அமைப்பு, செயற்திட்ட சேவைகளுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற அமைப்பான கிரிசலிஸ் ஆகியவை இணைந்து, வினைத்திறனான திண்மக்கழிவு முகாமைத்துவத்தில் பெண்களின் ஈடுபாட்டை ஊக்குவித்தல் என்ற செயற்திட்டத்தை ஒன்றிணைந்து அமுல்படுத்துகின்றன.

ஐக்கிய நாடுகள் சமாதானத்தை கட்டியெழுப்பும் நிதியத்தால் நிதியளிக்கப்பட்ட 2020-2021 செயற்திட்டம், நாட்டின் மேற்கு கடற்கரையில் உள்ள புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் சுமார் 4,000 மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் மீன்பிடியிலும் விவசாயத்திலும் பணியாற்றுகின்றார்கள்.

"இந்த செயற்திட்டத்தின் ஊடாக, பெண்களின் குரல்கள் கேட்கப்படுவதையும், அவர்கள் தங்களை, தங்கள் குடும்பங்களை மற்றும் சமூகங்களை பாதிப்பவை தொடர்பாக தீர்மானங்கள் மேற்கொள்வதில் அவர்கள் முழுமையாக ஈடுபட்டுள்ளனர் என்பதையும் உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம்" ன்று இலங்கை ஐ.நா பெண்கள் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதியான ரமாயா சல்கடோ கூறினார்.

"திண்மக்கழிவு முகாமைத்துவம் இந்த செயற்திட்டம் வெளிப்படுத்தும் முக்கிய சமூக - பிரச்சினையாக அடையாளம் காணப்பட்டது, ஆனால் நாங்கள் அவர்களின் இயலளவுகளை கட்டியெழுப்புகின்றோம், எனவே இந்த முழு சமூக அணுகுமுறை மற்றைய மோதல்கள் மற்றும் சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கும் பயன்படுத்தப்படலாம்" என அவர் கூறினார்.

முறையற்ற கழிவகற்றல் சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சமூகங்களுக்கிடையான உறவுகளுக்கு தீங்கு விளைவிப்பதால், இந்த செயற்திட்டம் அதற்கான செயன்முறையின் முன்னணியில் பெண்களுடன் அவர்களின் பகிரப்பட்ட சூழலுக்கான நிலையான தீர்வுகளை விருத்திசெய்வதற்கு சமூகத்தை ஒன்றிணைத்து கொண்டுவருகிறது.

ஏப்ரல் 2020இல், இந்தத் செயற்திட்டம் ஓர் தொடர்ச்சியான உள்ளூர் அளவிலான கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்து, புத்தளம் மற்றும் மன்னாரில் உள்ள 350 வரையான மக்கள் பிரதிநிதிகள், அரச உத்தியோகத்தர்கள், பெண் சமூகத் தலைவர்கள், சிவில் சமூகக் குழு உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் பலருடன் கழிவு முகாமைத்துவத்திற்கான பொதுவான பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் பற்றி கலந்துரையாடியது.

ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு மற்றும் கிரிசலிஸ் கலந்துரையாடல் பங்கேற்பாளர்களுக்கு கூட்டுத் தலைமைத்துவம், சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் வன்முறையற்ற மோதல் தீர்வு குறித்து பயிற்சியளித்தனர்.

இந்த மாத தொடக்கத்தில், UN பெண்கள் அமைப்பு உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் பெண் சமூகத் தலைவர்களை சுற்றுச்சூழல் மற்றும் சிவில் பொறியாளர்கள், உள்ளூர் அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட திண்மக்கழிவு முகாமைத்துவ நிபுணர்களுடன் இணைக்கும் இரண்டு town hall கூட்டங்களை ஏற்பாடு செய்தனர்.

இதனுடைய பரந்த நோக்கம் அதிகமான பெண்களை தலைமைத்துவப் பதவிகளில் அமர்த்துவதும் திண்மக் கழிவு முகாமைத்துவத்தில் சிறந்த நடைமுறைகளை பின்பற்றுவதும் ஆகும்.

ஐ.நா. பெண்கள் அமைப்பு செயற்திட்டத்தில் பங்கேற்கும் பெண்களில் புத்தள மாவட்டத்தின் சிலாபம் நகர சபை உறுப்பினர் கவிதா மனோகரியும் (வயது- 48) சமூக சேவையாளரும் புத்தளத்திலுள்ள சமூகத் தலைவருமான திலுஷானி பெர்னாண்டோவும் உள்ளடங்குவர்.

"சமீபத்தில், இரண்டு தரப்பினருக்கிடையேயான மோதலுக்கு நான் ஒரு மத்தியஸ்தராக இருக்க வேண்டியிருந்தது" என்று மனோகரி கூறினார்.

"இது என் மனதில் புதியதாக இருந்ததால், இரு தரப்பினரும் சமரசத்திற்கு வந்து அவர்களின் பிரச்சினைக்கு சட்டரீதியான தீர்வு காண்பதற்கு உதவுவதற்காக எங்கள் பயிற்சியில் நான் கற்றுக்கொண்ட சில நுட்பங்களைப் பயன்படுத்த முடிந்தது" என அவர் கூறினார். 

பெர்னாண்டோ கூறுகையில், "கழிவுகளைப் தரம்பிரித்தல் மற்றும் கழிவுகளை இழிவாக்குவதுடன் மீள்சுழற்சி செய்யும் போதான பொருளாதார நன்மைகள் பற்றி நான் நிறைய கற்றுக்கொண்டேன். இப்போது நான் எதையாவது தூக்கி எறிவதற்கு முன்பு இருமுறை யோசிக்கிறேன்.

அதற்கு பதிலாக புதிய ஒன்றை உருவாக்குவதற்கு நான் அதைப் பயன்படுத்துகிறேன். என் சமூகத்தில் உள்ள இளம் பிள்ளைகளுக்கு இதனைத்தான் நான் கற்பிப்பதற்கு நம்புகிறேன்” என்றார்.