ஜப்பானிய கப்பல்கள் கொழும்புக்கு விஜயம்

ஜப்பானிய கப்பல்கள் கொழும்புக்கு விஜயம்

ஜப்பானிய கரையோர சுய - பாதுகாப்பு படையின் இந்தோ - பசுபிக் செயற்படுத்தல் 2021 (IPD21) அலகைச் சேர்ந்த மாபெரும் கப்பல்களில் ஒன்றான “JS KAGA (DDH-184)” மற்றும் “JS MURASAME (DD-101)” ஆகியன கொழும்பு துறைமுகத்துக்கு நாளை (02) சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை (04) வரையான காலப்பகுதியில் நல்லிணக்க விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளன.

இலங்கைக்கு விஜயம் செய்யும் முன்னர், பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த சில நாடுகளுக்கு JMSDF கப்பல்கள் விஜயம் செய்துள்ளதுடன், பரஸ்பர மற்றும் பல்தேசிய கடல்சார் செயற்பாடுகளின் பங்கேற்றிருந்தன.

இந்த விஜயத்தினூடாக இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான நட்புறவை மேம்படுத்திக் கொள்வதற்கு உதவியாக அமைந்திருக்கும்.