கிண்ணியா படகு விபத்து: சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

கிண்ணியா படகு விபத்து: சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பகுதியில் விபத்துக்குள்ளான படகு சேவையை இயக்கியவர்கள் அப்பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக கிழக்கு மாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்ட குழு, இன்று கூடி ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த சம்பவத்தை அடுத்து பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறுஞ்சாக்கேணி பகுதியில் நேற்று காலை படகொன்று கவிழ்ந்ததில், பாடசாலை மாணவர்கள் நால்வர் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்திருந்தனர். சம்பவத்தில் 20 பேர் காயமடைந்திருந்ததுடன், அவர்களில் பலர் கிண்ணியா வைத்தியசாலையிலிருந்து திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் வீட்டின் மீது பிரதேசவாசிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த சம்பவம் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.