ஜப்பானினால் இலங்கைக்கு மூன்று மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

ஜப்பானினால் இலங்கைக்கு மூன்று மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக ஜப்பான் மூன்று மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவினை வழங்கவுள்ளதாக இன்று (20) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

இதற்கமைய, ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) ஊடாக இலங்கைக்கு தேவையான 1.5 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அவசர மருந்துப் பொருட்களை  உதவியாக வழங்குகிறது

அது போன்று தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்திற்கு உதவுவதற்கு 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ.600 மில்லியன்)  ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தினால குழந்தைகள் மற்றும் ஆதரவு தேவைப்படும் குடும்பங்களுக்கு உணவு உதவி வழங்குவதற்கு பயன்படுத்தப்பத்த வழங்குகின்றது.

பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு அத்தியாவசிய பொருட்களுக்கான பற்றாக் குறையில் காணப்படும் நிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஜப்பானிய  அரசாங்கம் யுனிசெப் மூலம் இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை வழங்குகிறது.

1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் யுனிசெஃபால் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கான மருந்துகளை வாங்குவதற்காக வழங்கப்படவுள்ளது. அவர்களில் 5,000 கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஏறக்குறைய 122,000 குழந்தைகள் உடனடித் தேவையுள்ளவர்களாக உள்ளனர். சுகாதார அமைச்சுடன் இணைந்து இலங்கை முழுவதும் உள்ள சுகாதார நிலையங்களுக்கு இந்த மருந்துகள் விநியோகிக்கப்படவுள்ளன.

இலங்கைக்கான ஜப்பானின் பதில் தூதுவர் கட்சுகி கோட்டாரோ,

"இலங்கை மக்களுக்கு மிக அவசரமாகத் தேவைப்படும் 25 வகையான மருந்துகளை வாங்குவதற்கு ஜப்பான் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர உதவியை வழங்குவது எங்களுக்கு பெருமையாகும்.

UNICEF மூலம் அடுத்த இரண்டு மாதங்களில், பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய சாத்தியமுள்ள கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அத்தியாவசிய உயிர்காக்கும் மருத்துவ சேவைகளை வழங்க உதவும் என்று நாம் நம்புகின்றோம்" என்றார்.

இதேவேளை, பொருளாதார நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெளிநாட்டு நாணய தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் மற்றும் சமையலுக்கு தேவையான எரிவாயு, மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் இலங்கை சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.

அத்தியாவசிய சேவைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சுகாதாரத் துறையானது, நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இருவரையும் பாதிக்கிறது. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான அடுத்த இரண்டு மாதங்களில் முடிவடையும் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.

இதேவேளை, 'நாடு முழுவதும் உள்ள சுமார் 15,000 நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கும்; 380,000 பாடசாலை மாணவர்களுக்கும், மூன்று மாதங்களுக்கு தேவையான வலுவூட்டப்பட்ட அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் WFP ஊடாக 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசர உதவியை வழங்குகின்றது.

ஜப்பான் கடந்த 10 ஆண்டுகளாக பாடசாலை உணவுத் திட்டத்திற்காக மொத்தம் 10 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஜப்பானில் தயாரிக்கப்பட்ட தகரத்திலடைக்கப்பட்ட மீன்களை வழங்குவதன் மூலம் சிறுவர்களுக்கு முக்கிய புரதத்தை வழங்கி வருகிறது.

"இந்த மனிதாபிமான உதவியானது பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை மக்களுக்கு உணவு அணுகல் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்த உதவும் என நம்புகிறோம்" என இலங்கைக்கான ஜப்பானின் பதில் தூதுவர் தெரிவித்தார்.