விஞ்ஞான அறிவின் முக்கியத்துவம்

விஞ்ஞான அறிவின் முக்கியத்துவம்

சச்சி பனவல

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பின் (OECD) சர்வதேச மாணவர் மதிப்பீட்டிற்கான நிகழ்ச்சித் திட்டமானது (PISA)  2018 இல் அதன் அறிக்கையில் விஞ்ஞான அறிவை, ஒருவர் உலகத்துடன் தொடர்பு கொள்ளும் விதம், பரந்த இலக்குகளை அடைய அதனை பயன்படுத்தும் வழிமுறை ஆகியவற்றை எவ்வாறு விஞ்ஞானம் தொடர்பான அறிவு மாற்றுகிறது என்பதைப் புரிந்துகொள்வதாகும் என வரையறுத்துள்ளது.  

Nebraska Extension துணைத் தலைவரான டீன் கேத்லீன் லோட்ல், விஞ்ஞான அறிவை விஞ்ஞானம் தொடர்பான அறிவென்றும், மக்கள் அபிப்பிராயம் அல்லது வதந்தியை காட்டிலும் உண்மைகள், ஆராய்ச்சி மற்றும் அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானமெடுக்கும் விஞ்ஞான கட்டமைப்பென்றும் வரையறுக்கிறார்.

யுனெஸ்கோ அன்றாட வாழ்வில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு விஞ்ஞான அறிவை அழகியல் ரீதியாகப் பயன்படுத்துகின்ற இயலளவு என்று இதனை எளிமையாக கூறுகிறது.

விஞ்ஞான அறிவின் முக்கியத்துவம் என்னவென்றால், அது சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சூழலை வழங்குகின்றது, ஏனென்றால் விஞ்ஞானம் தொடர்பான அறிவுள்ள மக்களால் சமூகத்தின் பல பிரச்சினைகளை சிறப்பாகச் சமாளிக்க முடிவதுடன் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பகுத்தறிவான மற்றும் தகவலறிந்த தீர்மானங்களை மேற்கொள்ள முடியும்.

நவீன சாதனங்கள் மற்றும் பிரயோகங்களைப் பயன்படுத்துகின்ற திறன் கொண்ட தொழில்நுட்ப அறிவுடன் விஞ்ஞான அறிவு பெரும்பாலும் குழப்பமடைகிறது.

விஞ்ஞான ரீதியில் அறிவூட்டப்படல் என்பது நபர் தன்னைச் சுற்றியுள்ள பௌதீக உலகத்தைப் பற்றிய உண்மைகளை வினாவி, புரிந்தகொண்டு, கண்டறிந்து, உணர்ந்து, விளக்குவது என்று பொருள்படும்.

சமூகம் விஞ்ஞான ரீதியில் அறிவற்றிருப்பது பாரிய பிரச்சினையாகும். உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளும் இன்று சில வகையான விஞ்ஞான அறிவின்மையை எதிர்கொள்கின்றமை பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஓக்லஹோமா மாநில பல்கலைக்கழகம் நடாத்திய சமீபத்திய ஆய்வில், பதிலளித்தவர்களில் பாதி பேர் உணவில் DNA உள்ளதா என்பதைக் குறிக்கும் உணவு சுட்டுத்துண்டுகளை விரும்புகிறார்கள்.

அந்த சமூகம் போதிய கல்வியறிவு பெற்றிருந்தால், அனைத்து உயிரினங்களுக்கும் DNA  உள்ளது, எனவே தாவரங்கள் அல்லது விலங்குகளில் இருந்து தயாரிக்கப்படும் உணவில் எப்போதும் DNA இடம்பெற்றிருக்கும் என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள்.

Durant மற்றும் பலர் நடத்திய மற்றொரு ஆய்வு அமெரிக்க குடியிருப்பாளர்களில் ஐந்து சதவீதத்தினரே விஞ்ஞான அறிவைப் பெற்றவர்கள் என்பதை வெளிப்படுத்தியது. இராம் ஷாஜாதி மற்றும் லாகூர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அபிதா நஸ்றின் ஆகியோர் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள அரச பாடசாலை மாணவர்களின் விஞ்ஞான அறிவை மதிப்பிட்டதுடன் அது மிகவும் குறைவாக காணப்பட்டதை கண்டறிந்தனர்.

சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், 2005 இல் 1.6% ஆக இருந்த நாட்டின் விஞ்ஞான அறிவு, 2020 இல் 10.56% ஆக மட்டுமே இருக்கும் என தெரியவந்துள்ளது.

ஒரு சமூகம் விஞ்ஞான ரீதியாக அறிவூட்டப்படாமல் இருப்பதற்கு அரசியல்வாதிகளால் ஊக்குவிக்கப்படும் போலி விஞ்ஞானமும் ஒரு முக்கிய காரணமாகும். ஜவஹர்லால் நேரு மற்றும் டாக்டர் அப்துல் கலாம் ஆகியோர் இந்தியாவை விஞ்ஞான அறிவு பெற்ற நாடுகளில் முதன்மையான நாடாக மாற்ற முயற்சித்த போதிலும், நாட்டின் விஞ்ஞான அறிவை பாதிக்கும் அரசியல்வாதிகள் இன்னமும் உள்ளனர்.

2018 ஆம் ஆண்டில் "டார்வினின் கோட்பாடு விஞ்ஞான ரீதியாக தவறானது" என்று இளநிலை கல்வி அமைச்சர் சத்யபால் சிங் அறிவித்ததும், ஜோதிடம் மிகப்பெரிய விஞ்ஞானம் என்றும் அது உண்மையில் விஞ்ஞானத்தை விட மேலானது அதை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்றும் உத்தரகாண்ட் முதல்வர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் 2009-2011ல் அவரது பதவிக்காலத்தில் வாதிட்டதும் சமீபத்திய உதாரணங்களாகும்.

இலங்கையில் நிலைமை மோசமாக உள்ளது. இங்கே கணக்கிடுவதற்கு பல உதாரணங்கள் உள்ளன. பிரபல அரசியல்வாதி ஒருவர் சுற்றுச்சூழல் ஆர்வலரிடம் "ஒட்சிசனால் என்ன பயன்? சாப்பிடலாமா? என்றமை"; நாட்டின் முன்னாள் ஜனாதிபதி இரவோடு இரவாக தீவை இயற்கை விவசாய நாடாக மாற்ற முடிவு செய்துள்ளதுடன் இந்த விடயத்தில் நிபுணர்களின் ஆலோசனைகளையும் எச்சரிக்கைகளையும் புறக்கணித்தமை;

நாட்டில் உள்ள முஸ்லிம்கள் உணவு மற்றும் உள்ளாடைகளில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மருந்துகளையும் இரசாயனங்களையும் சேர்ப்பதாக ஒரு அரசியல் மற்றும் மதக் குழுவினால் பரப்பப்படும் வெறுப்பு மற்றும் இனவெறி குற்றச்சாட்டுகள்; 8,000க்கும் அதிகமான சிங்களப் பெண்களுக்கு தனியாக ஒரு பிரபல முஸ்லீம் மருத்துவர் கட்டாயக் கருத்தடை செய்ததாகக் கூறும் அரசியல் செல்வாக்குமிக்க நிபுணர்களின் மற்றொரு குழு போன்றோர் அவர்களில் அண்மைக் காலத்திலிருந்தான மிகவும் முக்கியமானவர்களாவர்.

"சேதன உரங்கள்" தோல்வியில், சாத்தியமற்ற மற்றும் செயற்பாட்டிற்கு மாறான முடிவை எடுத்து "செயற்கை" உரங்களுக்குப் பதிலாக "இரசாயன" உரங்களைத் தடைசெய்தமைக்கு மேலதிகமாக, சேதன உரங்கள் கூட இரசாயனங்கள் என்ற உண்மையை அறியாமல் இருப்பது குழப்பத்தை மேலும் அதிகரித்தது.

கருவுறாமைக்கு காரணமான மருந்துகள் மற்றும் இரசாயனங்களைப் பொறுத்தவரை, அவை இன்னமும் கண்டறியப்படாமையால் இருக்கவில்லை. கட்டாய கருத்தடை கதை, மருத்துவ ரீதியாக அபத்தமானது, நிச்சயமாக விசாரணைக்குப் பிறகு புனையப்பட்டது என்று நிரூபிக்கப்பட்டது.

அச்சு மற்றும் இலத்திரனியல் ஆகிய இரண்டிலுமுள்ள பிரதான ஊடகங்களும் பிரச்சினையை ஊக்குவிக்கின்றன. மொன்டானா ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் அறிஞரான கேசி ஃபாரஸ்ட் கானோட், பிரதான செய்தி ஊடகங்களால் விஞ்ஞான விடயங்கள் அரசியலாக்கப்படுவது, போலி விஞ்ஞான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் அதிகரிப்பு மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் தவறான தகவல் போன்றன உள்ளிட்ட ஆனால் அவற்றிற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாத பிரபல ஊடகங்களில் உள்ள கூறுகளால் அமெரிக்காவின் விஞ்ஞான அறிவு எதிர்மறையாக பாதிக்கப்படுகிறது என்று கூறுகிறார்.

ஏறக்குறைய மற்ற அனைத்து நாடுகளும் தங்கள் சொந்த நிலைமை தொடர்பில் ஒரேமாதிரியாக உறுதியளிக்கும் அதே வேளையில், இலங்கையில் மட்டும் பகிர்ந்து கொள்ள ஏராளமான உதாரணங்கள் உள்ளன. கொவிட்-19 பெருந்தொற்றுக்கான தீர்வாக சந்தைப்படுத்தப்பட்ட "தம்மிக பெனியா" என்று அழைக்கப்படும் "சுதேசிய மருத்துவர்" என்று சுயமாக அறிவிக்கப்பட்ட ஒருவரால் தயாரிக்கப்பட்ட அங்கீகாரமற்ற உள்நாட்டு "பாணி" ஒரு சிறந்த உதாரணமாகும்.

ஒரு நாடு தனது சமூகம் ஒரு விடயத்தைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும் மற்றும் கிடைக்கக்கூடிய சிறந்த அறிவைக் கொண்டு சிறந்த தீர்மானங்களை எடுக்க வேண்டுமென்றால், அதன் விஞ்ஞான அறிவை மேம்படுத்துவது கட்டாயமாகும்.

அதை அடைவதற்கான சிறந்த வழி, STEM கல்வியை ஊக்குவிப்பதாகும், இது பொதுவாக விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் அல்லது கணிதத்தைக் கற்றல் அல்லது கற்பித்தல் என்று தவறாகக் கருதப்படுகிறது. STEM கல்வி என்பது மிகவும் பரந்த கருத்தைக் கொண்டுள்ளது.

எந்தவொரு பாடத்திலும், இசை மற்றும் நடனம் போன்ற அழகியல் பாடங்களில் கூட நான்கையும் இணைக்கின்ற கற்பித்தல் அணுகுமுறை இதுவாகும். இதன் மூலம் மாணவர்களை விஞ்ஞான ரீதியாகவும், பகுப்பாய்வு ரீதியாகவும், முறையாகவும், விமர்சன ரீதியாகவும், செய்முறைரீதியாகவும் சிந்திக்கவும் கற்றுக்கொள்ளவும் பயிற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள அதேசமயம், அந்தப் பாடங்களில் ஏதேனும் தொடர்புபட்ட தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்குகிறது.

வெகுஜன ஊடகங்கள் மூலம் பொதுமக்களின் விஞ்ஞான அறிவை மேம்படுத்துவது மற்றொரு அணுகுமுறையாகும். இருப்பினும், பாகிஸ்தானின் பேராசிரியர் முஹம்மது ஹமித் ஜமான் 2019 இல் எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனில் மிக சரியாக எழுதியுளார்.

இதில் தனித்த மிகப்பெரிய இடையூறு என்னவென்றால் விஞ்ஞான ரீதியாக துல்லியமான ஆனால் பரந்த பார்வையாளர்களை ஈடுபடுத்தக்கூடிய ஒரு கதையை தொடர்பாடல் செய்ய முடியுமாகவுள்ள விஞ்ஞான ஊடகவியலாளர்கள் மற்றும் உள்ளடக்க ஆசிரியர்களின் பற்றாக்குறையாகவே இருக்கும். இது இலங்கைக்கும் பொருந்தும்.

துரதிர்ஷ்டவசமாக, ஊடகவியலாளர்களை விஞ்ஞான இதழியலுக்கு ஈர்ப்பதற்கான எந்த உத்வேகத்தையும் நாம் இங்கு காணவில்லை. வருடாந்தம் சிறந்து விளங்கும் இலங்கை இதழியல் விருதுகளில், "ஆண்டின் சிறந்த சுற்றுச்சூழல் அறிக்கையிடல்" மற்றும் "ஆண்டின் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் மருத்துவம் தொடர்பான நிருபர்" வகைகள் மட்டுமே இருப்பதுடன், இந்த ஆண்டின் விஞ்ஞான ஊடகவியலாளர் என்ற வகையை கொண்டிருக்கவில்லை என்பது இது இப்பகுதியை சற்று உள்ளடக்கினாலும் விஞ்ஞான இதழியலை பரந்த பொருளில் உள்ளடக்கவில்லை என்பதை காட்டுகின்றது.

இதனுடன் தொடர்பான நிறுவனங்கள் இதை தீவிரமாக பரிசீலித்தால், இருண்ட பாதையின் முடிவில் வெளிச்சம் கிடைக்கும் என்று நம்பலாம். பிரபல அமெரிக்க வானியல் இயற்பியலாளர், எழுத்தாளர் மற்றும் விஞ்ஞான தொடர்பாளரான நீல் டி கிராஸ் டைசன் ஒருமுறை கூறியது போல்,

விஞ்ஞான அறிவு என்பது நாளைய பிரச்சினைகளின் தீர்வுகள் பாயும் ஒரு குழாயாகும். ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் ஆரோக்கியம், செழுமை மற்றும் பாதுகாப்பு அந்த நாட்டின் சமூகத்தின் விஞ்ஞான அறிவைப் பொறுத்ததாகும்.

அதை அடையும் வரை, நம்மை, நமது சமூகங்களை, நமது நாட்டை, மற்றும் உலகையே பாதிக்கும், சரியாக இலங்கையின் தற்போதைய நிலைமையை பாதிக்கும் வகையில், அறிவுக் குறைவான தீர்மானங்களை எடுக்கும் அபாயத்தில் இருக்கிறோம். நாம் இப்போது பாடம் கற்கவில்லை என்றால், நாம் ஒருபோதும் அதனை மேற்கொள்ள மாட்டோம்.

டாக்டர் சச்சி பனவல புதிதாக நிறுவப்பட்ட தேசிய புத்தாக்க முகவரகத்தின் மேலதிக தலைமை புத்தாக்க உத்தியோகத்தராவார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்திற்கான ஒருங்கிணைப்பு செயலகம் (COSTI) மற்றும் தேசிய விஞ்ஞான அறக்கட்டளை ஆகியவற்றில் பணியாற்றினார்.