படகுகள் மூலம் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைவதை தடுப்பது தொடர்பில் கலந்தரையாடல்

படகுகள் மூலம் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைவதை தடுப்பது தொடர்பில் கலந்தரையாடல்

இந்தியாவிலிருந்து கடல் வழியாக படகுகள் மூலம் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைவதை தடுப்பது தொடர்பிலான விரிவான கலந்தரையாடலொன்று இன்று (29) திங்கட்கிழமை இடம்பெற்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினை வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அலரி மாளிகையில் சந்தித்தார்.

இதன்போதே இந்தியாவிலிருந்து கடல் வழியாக படகுகள் மூலம் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைவதை தடுப்பது தொடர்பில் கலந்தரையாடப்பட்டது.

கொரோனா வைரஸுக்கு பின்னரான சூழ்நிலையில் வட மாகாண மக்களின் வாழ்கையினை இயல்பு நிலைக்கு கொண்டுவருவது தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

வட மாகாண மக்களின் வாழ்க்கையை கட்டியொழுப்புவது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் மற்றும் மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் இந்த சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.