அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் தரகர்களுக்கு இடமளிக்க வேண்டாமென ஜனாதிபதியிடம் கோரிக்கை

அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் தரகர்களுக்கு இடமளிக்க வேண்டாமென ஜனாதிபதியிடம் கோரிக்கை

நாட்டில் அரிசித் தட்டுப்பாட்டை ஏற்படுத்த இடைத் தரகர்களுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் பொலன்னறுவை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் கூட்டம் பொலன்னறுவை - சிறிபுர பிரதேச சபை மைதானத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ஷவிடம் விவசாயிகள் இக்கோரிக்கையினை முன்வைத்தனர். அழிந்து கொண்டு வரும் அரிசி களஞ்சியசாலையை அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் அவற்றை மீள் புனரமைப்பு செய்வதற்கும் அரிசி கொள்வனவை சீர்படுத்துவதற்கும் நடைமுறை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது விவசாயிகளிடம் தெரிவித்தார். 

விவசாயிகளை பாதுகாத்து பிரச்சினைகள் ஏற்படாத வகையில் எதிர்காலத்தில் செயற்பட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் இங்கு குறிப்பிட்டார்.

இதேவேளை மத்திய வங்கி பிணை முறி மோசடிக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் பொலன்னறுவை பிரதேச மக்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

தொழில் பிரச்சினை மற்றும் காட்டு யானைகளின் அச்சுருத்தல் ஆகியன பொலன்னறுவை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாகும். இந்த பிரச்சினைக்கும் தீர்வை பெற்றுத் தருமாறு மக்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.