குவைத் Islamic Care Societyஇனால் திரவ ஒட்சிசன் கொள்கலன் அன்பளிப்பு

குவைத் Islamic Care Societyஇனால்  திரவ ஒட்சிசன் கொள்கலன் அன்பளிப்பு

 ரிஹ்மி ஹக்கீம்

கம்பஹா, வத்துபிட்டிவலை ஆதார வைத்தியசாலைக்கு அமைவாக, கஹட்டோவிட்ட அல் ஹிமா நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில், குவைத் Islamic Care Society இனால் திரவ ஒட்சிசன் கொள்கலன் அன்பளிப்பு செய்யப்பட்டது.

இலங்கைக்கான குவைத் தூதுவரின் வழிகாட்டலின் கீழ் கொவிட் தொற்றாளர்களுக்காக நிறுவப்பட்ட  திரவ ஒட்சிசன் கொள்கலன், வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரி எம்.ஐ.சிராஜிடம் அண்மையில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

3,000 லீட்டர் கொள்ளளவுடைய இதன் பெறுமதி 90 இலட்சம் ரூபா ஆகும். குறித்த நன்கொடையினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் இலங்கைக்கான குவைத் பிரதித் தூதுவர் அப்துல் அஸீஸ் அல் அதவானி, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மஹேந்திர ராஜபக்ச உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், அல் ஹிமா நிறுவனத்தின் தலைவர் நூருல்லாஹ், குவைத் தூதரக உத்தியோகத்தர் எம். பிர்தவ்ஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.