முல்லைத்தீவு பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் அருவருப்பானது: சுதந்திர ஊடக இயக்கம்

முல்லைத்தீவு பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் அருவருப்பானது: சுதந்திர ஊடக இயக்கம்

முல்லைத்தீவு பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் அருவருப்பானது என சுதந்திர ஊடக இயக்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பட்டாளரான சீதா ரஞ்சனி மற்றும் செயலாளர் லசந்த டி சில்வா ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"முல்லைத்தீவு முறிப்பு காட்டுப் பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் மரக் கடத்தல் நடவடிக்கை குறித்த தகவல் சேகரிக்கச் சென்ற இரண்டு ஊடகவியலாளர்கள் ஒரு மரக் கடத்தல்காரர் உள்ளிட்ட குழுவினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. வீரகேசரி பத்திரிகை மற்றும் பல ஊடகங்களுக்காக செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர் கனபதிபில்லை குமனன் மற்றும் ஹிரு, ரூபவாஹினி நிருபர் சண்முகம் தவசீலன் ஆகியோர் அக்டோபர் 12 மாலை தாக்கப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதல் காரணமாக ஊடகவியலாளர் தவசீலனின் இரண்டு பற்கள் உடைந்துள்ளதாகவும் ஊடகவியலாளர் குமனன் மூக்கில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இரு ஊடகவியலாளர்களும் முல்லைத்தீவு நீதித்துறை மருத்துவப் பொலிஸ்  பிரிவில் புகார் செய்து, சிகிச்சைக்காக முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் ஐந்தாம் இலக்க வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுச்சூழல் அழிவு பற்றிய செய்திகளை அடிக்கடி ஊடகங்களில் காண்கிறோம். இந்த பின்னணியில் இதில் ஈடுபடுவோர் மீது வலுவான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, இந்த சட்டவிரோத செயல் குறித்து அறிக்கையிடச் செல்லும் ஊடகவியலாளர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்பது கவலைக்குரிய விடயமாகும்.

மேலும், மொனராகலை கும்புகன் ஓயா பாலம் அருகே சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கையை அறிக்கையிடச் சென்ற இந்தூனில் விஜேநாயக்க என்ற பத்திரிகையாளரும் அக்டோபர் 3 ம் தேதி இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

இதுபோன்ற விரும்பத்தகாத சூழ்நிலைகளை எதிர்கொள்ளாமல் ஊடகவியலாளர்கள் தங்களது கடமைகளை  சுதந்திரமாக தொடர வேண்டுமானால், குறிப்பிட்ட நபர்கள் மீது தகுதி, தராதரம் பாராமல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுதந்திர ஊடக இயக்கம் அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறது.