புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர் பட்டியல் நேற்று (08) நள்ளிரவு அதிவிசேட வர்த்தமானியூடாக வௌியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற 196 வேட்பாளர்களின் பெயர்கள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் பின்னர் வௌியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.