றிசாத் பதீயுதீனுக்கு பிடியாணை வழங்க நீதிமன்றம் மறுப்பு

றிசாத் பதீயுதீனுக்கு பிடியாணை வழங்க நீதிமன்றம் மறுப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதீயுதீனுக்கு பிடியாணை வழங்க நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் பிடியாணையினை பெற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனை கைது செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரினால் பதில் பொலிஸ் மா அதிபருக்கு இந்த அறிவுறுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தலுக்கு அமைய விசேட மனுவொன்றினை குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று (13) செவ்வாய்க்கிழமை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் சமர்ப்பித்தனர்.

இதன்போது முன்னாள் அமைச்சர் றிசாத் பதீயுதீனை கைகது செய்வதற்கு பிடியாணை வழங்குமாறு நீதவானிடம் வேண்டுகோள் விடுத்தனர். குறித்த கோரிக்கை நீதவானினால் நிராகரிக்கப்பட்டு இது தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை வாக்களிப்பதற்காக பஸ்ஸில் ஏற்றிச் சென்றதிற்கமைய தேர்தல் சட்டத்தினை மீறியமை மற்றும் பொது நிதியினை முறைகேடாக பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் பிடியாணையினை பெறுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.