நாளை கூடுகிறது மு.கா உயர் பீடம்

நாளை கூடுகிறது மு.கா உயர் பீடம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட கூட்டம் நாளை (13) சனிக்கிழமை மாலை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெறவுள்ளது.

கட்சி யாப்பின் பிரகாரம் ஒவ்வொரு மாதமும் ஒரு தடவை கட்சியின் உயர் பீட கூட்டம் இடம்பெற வேண்டும். எனினும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இரண்டு மாதங்களின் பின்னர் இந்த கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட கூட்டத்தில் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த அக்கட்சியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் விளக்கம் கோருவது என தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது. இதேவேளை, 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பில் நாளைய உயர் பீட கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடந்த வாரம் கல்முனையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

20க்கு ஆதரவளித்தவர்கள் தொடர்பில் அடுத்த உயர் பீட கூட்டத்தில் தீர்மானம்: ஹக்கீம்