'கொவிட்-19' நோய் தடுப்பு நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியீடு

'கொவிட்-19' நோய் தடுப்பு நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியீடு

'கொவிட்-19' நோய் தடுப்பு பற்றிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் இன்று (19) திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

பாத் பைண்டர் பவுண்டேசனினால் வெளியிட்டப்பட்ட இந்த நூலின் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு – 50, ஹெவ்லொக் சிட்டியிலுள்ள ஓச்சாட் அரங்கில் இடம்பெற்றது.

பேராசிரியர் தை. தனராஜ் மற்றும் டாக்டர் முரளிவள்ளிபுரநாதன் ஆகியோரினால் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நூலின் 20,000 பிரதிகளை தமிழ் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு நன்கொடையாக வழங்க கொழும்பிலுள்ள சீன தூதுவராலயம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பிலுள்ள சீன தூதுவராலயத்தின் அரசியல் பிரிவின் பொறுப்பதிகாரி லுஹோ சொங்க், பாத் பைண்டர் பவுண்டேசனின் தவிசாளர் பேர்ணாட் குணதிலக்க மற்றும் டவர் ஹோல் நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாசிம் உமர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.