ஜூன் 20 இல் பொதுத் தேர்தல் நடாத்துவதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு

ஜூன் 20 இல் பொதுத் தேர்தல் நடாத்துவதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு

எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் நடாத்துவது தொடர்பான தேர்தல்கள் ஆணைக்குழுவின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி சரித்த குணவர்த்தனவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் வர்த்தமானி அறிவித்தல் சட்ட ரீதியானதாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய, அதன் உறுப்பினர்களான பேராசிரியர் ரத்னஜீவன் ஹுல், ஜனாதிபதி சட்டத்தரணி என்.ஜே.அபேசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜயசிங்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் நடாத்துவது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல், தனது அடிப்படை மனித உரிமையினை மீறுவதாக குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த மனு தொடர்பிலான தீர்ப்பு அறிவிக்கும் வரை பொதுத் தேர்தல் நடத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.