கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்ய ஜனாதிபதி செயலணி நியமனம்

கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்ய ஜனாதிபதி செயலணி நியமனம்

கிழக்கு மாகாணத்தினுள் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியொன்றி நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கைச் ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரையினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இந்த செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்த ஜுன் 1ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மே 22ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பௌத்த ஆலோசனைச் சபையின் இரண்டாவது கூட்டத்தின் போது கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மதிப்பீடு செய்து பாதுகாப்பதற்கான செயலணியொன்றினை நியமிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்திருந்தார்.

அதற்கமைய பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல  கமல் குணரத்ன தலைமையிலான இந்த குழுவில் பின்வருவோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

1.   தொல்பொருள் சக்கரவர்த்தி எல்லாவல மேதானந்த நாயக்க தேரர்
2. வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய இரு மாகாணங்களின் மற்றும் தமன்கடுவ பிரதேசத்தின் பிரதம சங்கநாயக்க அரிசிமலே ஆரணியத்தின் சேனாசனாதிபதி பனாமுரே திலகவங்ச நாயக்க தேரர்
3.    கலாநிதி செனரத் பண்டார திசாநாயக்க – தொல்பொருள் பணிப்பாளர் நாயகம்;
4.    திருமதி சந்திரா ஹேரத் - காணிப் பணிப்பாளர் நாயகம்
5.    திருமதி ஏ.எல்.எஸ்.சி.பெரேரா - நில அளவையாளர நாயகம்
6. பேராசிரியர் ராஜ் குமார் சோமதேவ – சிரேஷ்ட விரிவுரையாளர் - களனிப் பல்கலைக்கழகம்
7.    பேராசிரியர் கபில குணவர்த்தன - வைத்திய பீடம் - பேராதனை பலகலைக்கழகம்
8.   தேசபந்து தென்னக்கோன் - சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், மேல் மாகாணம்
9.    ஏச்.ஈ.எம்.டப்ளிவ்.ஜி. திசாநாயக்க – கிழக்கு மாகாண காணி ஆணையாளர்
10.   திலித் ஜயவீர – தலைவர், தெரண ஊடக வலையமைப்பு

பின்வரும் பணிகளை நிறைவேற்றுவதற்காக இந்த செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. அவையாவன:

1. கிழக்கு மாகாணத்தினுள் அமைந்துள்ள தொல்பொருள்ர் ரீதியிலான பெறுமதி வாய்ந்த இடங்களை அடையாளம் காணுதல்

2. அவ்வாறு அடையாளம் காணப்பட்ட இடங்கள் மற்றும் தொல்பொருள் பாதுகாப்பு மற்றும் மீள் நிர்மாணித்தல், அத்தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்காகப் பொருத்தமான நடைமுறையொன்றை இனங்காணுதல் மறறும் செயற்படுத்துதல்

3. அத்தொல்பொருள் இடங்களுக்காக ஒதுக்கப்பட்ட காணிகளின் அளவை அடையாளம் காணுதல், குறித்துரைக்கப்பட்ட மற்றும் சட்ட ரீதியாக அவ்விடங்களை ஒதுக்குவதற்குத் தேவையான செயற்பாடுகளை எடுத்தல்

4. அத்தொல்பொருள் ரீதியான பெறுமதி வாய்ந்த இடங்களின் கலாசாரப் பெறுமதிகளைப் பாதுகாத்து இலங்கையின் தனித்துவத்தை தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பிரசாரம் செய்தலும் சொல்லப்பட்ட மரபுரிமைகளை மேமபடுத்துவதற்காகச் சிபாரிசுகளை சமர்ப்பித்தலும்