மட்டு. வைத்தியசாலையின் கொவிட் விடுதியிலிருந்து விடுக்கப்படும் அவசர வேண்டுகோள்

மட்டு. வைத்தியசாலையின் கொவிட் விடுதியிலிருந்து விடுக்கப்படும் அவசர வேண்டுகோள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு  உள்ளாகி உள்ளக விடுதியில் (கொவிட் unit)  சிகிச்சை பெறும் நோயாளிகளின் உடல் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன்  ஓர் அமைப்பு பணிப்பாளரின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த விடுதியில் பல்வேறு குறைபாடுகள் அறியப்பட்டு அதனை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம். இதற்காக உதவி செய்ய விரும்புவர்கள் எங்களை நாடவும். நீங்கள் செய்யக்கூடிய உதவிகள் :

1. ஒரு நேர காலை, மதிய, இரவு ஆரோக்கிய உணவுகளை வழங்குவதற்கு அல்லது  பழங்கள் தேநீர் வழங்குவதற்கு உதவி செய்யலாம்.

2. உடைகள்

3. நோயாளிகளை மகிழ்ச்சி படுத்தவும் ஆலோசனை வழங்கவும் மூன்று தொலைக்காட்சி பெட்டி மற்றும் DVD கருவிகள் தேவைப்படுகின்றது.

4. உறவினர்கள் நோயாளிகளுடன் வீடியோ மூலம் கலந்துரையாடுவதற்கு  கணனிகள்  தேவைப்படுகின்றது.

மேலும்  நோயாளிகளின் மன உள ஆன்மீக விருப்பங்களை நிறைவு செய்வதற்கு உங்களின் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.

Dr K T Sundaresan MBBS(Kel), MD(Col), FRCP(Edin)
Senior lecturer/ Honorary Consultant Physician
Teaching Hospital Batticaloa
Phone 0777350912
drsundaresan@gmail.com

எம்.எஸ்.எம்.நூர்தீன்