பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்

பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது.

இதற்கான வாக்கெடுப்பு மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலின் ஊடாக 196 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதற்காக 7,452 பேர் நாடளாவிய ரீதியில் போட்டியிடுகின்றனர்.

நாடளாவிய ரீதியிலுள்ள 12,985 வாக்குச்சாவடிகளில் 16,263,885 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.