12 ஆம் திகதி முதல் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி

12 ஆம் திகதி முதல் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி முதல் தடுப்பூசி போடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அனைத்து பிராந்திய சுகாதார பணிப்பாளர்களுக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட சுற்றறிக்கையொன்றினை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.