9ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம்

9ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம்

இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் ஒன்பதாவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று (09) காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

களனி ரஜ மகா விகாரையில் இன்று (09) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த நிகழ்வில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

மஹிந்த ராஜபக்ஷ நான்காவது தடவையாக பிரதமராக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.