@ManthriLK இன் தரப்படுத்தலில் சாணக்கியனுக்கு முதலிடம்

@ManthriLK இன் தரப்படுத்தலில் சாணக்கியனுக்கு முதலிடம்

கடந்த ஜுலை மாதம் பாராளுமன்றத்தில் சிறப்பாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தர வரிசையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

@ManthriLK என்ற இணையத்தளத்தினால் இந்த தரப்படுத்தல் மாதாந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த தரப்படுத்தில் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர் முதலிடத்தினை பெற்றுள்ளமை இதுவே முதற் தடவையாகும்.

இந்த தரப்படுத்தில் முதல் ஐந்து இடத்தினை பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரம்:

1. இராசமாணிக்கம் சாணக்கியன்
2. சரத் வீரசேகர
3. புத்திக பத்திரன
4. அலி சப்ரி
5. பிரேம்நாத் சீ தொல்வத்த