MPக்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் சலுகைகளின் விபரம்

MPக்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் சலுகைகளின் விபரம்

எஸ். ரூபதிசன்

பாராளுமன்ற உறுப்பினரொருவருக்கு வழங்கப்படுகின்றன நிதி தொடர்பான நன்மைகள், சேவைகள் மற்றும் வசதிகள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஒரு மாத கொடுப்பனவாக 54,285 ரூபாவும் அலுவலக பாராமரிப்பிற்காக மாதாந்தம் 100,000 ரூபாவும் வழங்கப்படுகிறது.

பாராளுமன்றக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு ஒரு நாளைக்கு 2,500 ரூபா கொடுப்பனவும், அமர்வு இல்லாத நாட்களில் குழுக்கூட்டம் நடைபெறும் போது நாள் ஒன்றுக்கு ரூபா 2,500 வழங்கப்படுகிறது

ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரினதும் அஞ்சல் வசதிகளுக்காக ஆண்டுக்கு 350,000 ரூபா வழங்கப்படுகிறது என்றும், இது காலாண்டுக்கு 87,500 ரூபா செலுத்தப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி பாவனைக்காக மாதாந்தம் 50,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் விருந்தினர், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ரூபா.200 விலையில் பாராளுமன்றத்தில் உணவு வழங்கப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அமர்வுக்கு வரும் நாள் ஒன்றில் அதிகபட்சம் பன்னிரண்டு பார்வையாளர்களை உணவகத்துக்கு அழைத்து வர முடியும்.

எரிபொருள் கொடுப்பனவைப் பொறுத்தவரை, பாராளுமன்றத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் தேர்தல் மாவட்டத்துக்கான தூரத்தின் அடிப்படையில் இந்த தொகை செலுத்தப்படுகிறது.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு மாதம் 289.94 லீட்டர் டீசல் மற்றும் கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு 344.58 லீட்டர் அடிப்படையில் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

பாராளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும் கலந்துகொள்வதற்காக ஒரு நாளைக்கு 2,500 ரூபா என்ற அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட வாகன சாரதிக்கான கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அரசாங்கத்திடமிருந்து சாரதி வழங்கப்படாவிட்டால், ரூபா 3,500 ரூபா மற்றும் 1,000 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினரின் போக்குவரத்து செலவுகளை ஈடுசெய்ய அதிகபட்சம் நான்கு தனிப்பட்ட பணியாட்களுக்கு 10,000 ரூபா என்ற தனி மாதாந்த போக்குவரத்து கொடுப்பனவு வழங்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் அனைத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

-சண்டே டைம்ஸ்-