தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவினை நியமிக்கும் போது பக்கச்சார்பற்ற தன்மையை கடைபிடிக்குமாறு கோரிக்கை

  தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவினை நியமிக்கும் போது பக்கச்சார்பற்ற தன்மையை கடைபிடிக்குமாறு கோரிக்கை

ஆணையாளர்களை நியமிக்கும் போது RTI சட்ட நடைமுறைகளை பின்பற்றுதல் அவசியம்.

TISL மற்றும் ஏனைய CSOs ஊடாக பொருத்தமான நபர்களை உள்ளடக்கிய பரிந்துரைகள் சமர்பிக்கப்பட்டன.

தகவலறியும் உரிமைக்கான சட்டத்தின் நோக்கங்களுக்காக தாபிக்கப்பட்ட தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் (RTI ஆணைக்குழு) பதவிக்காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைவதோடு, 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளுக்கேற்ப புதிய ஆணையாளர்கள் மற்றும் அங்கத்தவர்கள் நியமிக்கப்படுவார்கள் என ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நம்புகின்றது.

இது தொடர்பில் TISL இனால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"RTI ஆணைக்குழுவானது 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் உரிமைச் சட்ட பிரிவ 11ன் ஏற்பாட்டின் கீழ் நிறுவப்பட்டதாகும். இவ் ஆணைக்குழுவில் ஒரு தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் ஐந்து வருடங்கள் பதவி வகிக்கின்றனர்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட முன்னர், அரசியலமைப்புப் பேரவையின் பரிந்துரைகளின் பேரில் ஜனாதிபதியால்  எவ்வாறாயினும், அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் காரணமாக RTI ஆணைக்குழு நியமன முறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

RTI சட்ட ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்த அரசியலமைப்பு பேரவைக்கு பதிலாக பாராளுமன்ற பேரவை உள்வாங்கப்பட்டுள்ளது. எனவே, RTI ஆணைக்குழுவின் பதவி/ நியமனங்களை மேற்கொள்வதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களிடமிருந்து பரிந்துரைகளை பெறுவது பாராளுமன்ற பேரபையின் பொறுப்பாகும்.

இருப்பினும், அரசியலமைப்பு பேரவை போலல்லாமல், யாரை நியமிக்க வேண்டும் என்பது குறித்து ஜனாதிபதிக்கு வெளிப்படையான பரிந்துரைகளை வழங்குவதற்கு பதிலாக குறித்த நியமனங்கள் தொடர்பான அவதானிப்பை செலுத்துவது மாத்திரமே குறித்த பாராளுமன்ற பேரவைக்கு செய்ய முடியுமான ஒன்றாகும்.

RTI ஆணைக்குழு நியமனங்களை மேற்கொள்ளும் போது சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஜனாதிபதி கருத்திற் கொள்வார் என TISL எதிர்பார்க்கின்றது. அவ்வாறு கருத்திற் கொண்டு செயற்படுவதானது இலங்கையில் RTI சட்டத்தின் ஜனநாயக தன்மையினை தொடர்ந்தும் நிலைநாட்டப்படுவதை உறுதிப்படுத்தும் அதேவேளை, குறித்த பிரிவினரிடமிருந்து பெறப்படும் பரிந்துரைகள் தொடர்பாக ஜனாதிபதி கவனம் செலுத்துவார் எனவும் TISL நம்புகின்றது.

“கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவானது பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையினை உறுதி செய்யும் பல செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

RTI ஆணைக்குழுவானது சுதந்திரமாக செயற்பட்டதன் காரணமாகவே அவர்களால் இவ் அடைவினை எட்ட முடிந்தது. ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்கள் நியமனத்திலும் RTI சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி பெறப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் நியமனங்களை வழங்குவதன் மூலம் ஆணைக்குழுவின் சுயாதீன செயற்பாட்டினை ஜனாதிபதி தொடர்ந்தும் பாதுகாப்பார்” என TISL நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் நதிஷானி பெரேரா குறிப்பிடுகின்றார்.

ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களை நியமிப்பதில் சிவில் சமூக பங்களிப்பினை நிறைவேற்றுவதற்காக நாட்டிலுள்ள அனைத்து சிவில் சமூக அமைப்புக்களையும் அணிதிரள TISL நடவடிக்கைகளை மேற்கொண்டது.

RTI ஆணைக்குழுவின் பதவி நியமனங்களுக்கு TISL மற்றும் ஏனைய சிவில் சமூக அமைப்புக்கள் பரிந்துரைத்த பெயர்கள் நேற்று பாராளுமன்ற பேரவையிடம் ஒப்படைக்கப்பட்டது.

RTI ஆணைக்குழுவானது ஆளும் நிருவாகம் மற்றும் அரச துறைகளை பொது மக்களுடன் இணைக்கும் பாலமாக நாம் கருதலாம். சிறிய அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள் தொடக்கம் பிரதமரின் சொத்து அறிவிப்புக்களை வெளியிடுவது போன்ற சர்ச்சைக்குரிய விடயங்கள் வரையிலான RTI கோரிக்கைகளுக்கு தற்போதைய RTI ஆணைக்குழுவின் காலப்பகுதியில் பதில்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவை ஆணைக்குழு சுதந்திரமாக செயற்படுகின்றமைக்கான சிறந்த சான்றுகளாகும் மற்றும் ஆணைக்குழு நியமனங்களை மேற்கொள்ளும் போது RTI சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை ஏன் பின்பற்ற வேண்டும் என்பதற்கான காரணத்தினையும் தெளிவுபடுத்துகின்றது.  

TISL நிர்வாக பணிப்பாளர் நதிஷானி பெரேரா மேலும் குறிப்பிடுகையில்

“RTI ஆணையாளர்களின் பின்னணி மற்றும் அவர்கள் வகிக்கும் பங்கு என்பன பொதுமக்கள் மீது ஏற்படுத்துகின்றது. நியமிக்கப்பட்ட ஆணையாளர்கள் அரசியல் சார்பற்ற அல்லது அரசியலுடன் நேரடி தொடர்புகள் இல்லாதவர்களாக இருந்தால், அவர்களால் மக்கள் சார்பாக பாரபட்சமின்றி தமது செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

ஆகவே, RTI ஆணைக்குழுவின் பதவிகளில் நியமிக்கப்படும் தனிநபர்களின் இயல்பை கூர்ந்து கவனிப்பது பொதுமக்களின் பொறுப்பாகும்" என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.    தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் பதவி வெற்றிடங்களை பூர்த்தி செய்ய TISL மற்றும் ஏனைய சிவில் சமூக அமைப்புக்களூடாக பாராளுமன்ற பேரவைக்கு பின்வரும் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.   

1.    Dr. A.K.C.H பிரியங்கனி ஜயசுந்தர  
பரிந்துரை: SAFE நிறுவனம்  
 
2.    திருமதி. J.H நில்மினி சுனேத்ரா குமாரி  
பரிந்துரை: Child Vision Sri Lanka
 
3.    திரு. P. சாய் பாலசுப்ரமணியம்  
பரிந்துரை: Peoples’ Development Foundation  
 
4.     Rev. Dr நோயல் டயஸ்  
பரிந்துரை: Centre for Social Justice and Equity  
 
5.    திரு. D.M சமந்த தசநாயக்க
பரிந்துரை: Centre for Human Rights and Community Development  
 
6.    Dr. பிரதிபா மஹாநாமஹேவா  
பரிந்துரை: Caritas SED
 
7.    திரு. சம்பத் புஷ்பகுமார  
பரிந்துரை: Families of the Disappeared    
 
8.    திரு. நடராஜா சிவரஞ்சித்  
பரிந்துரை: NGO கூட்டமைப்பு (Consortium), அம்பாறை  
 
9.    திரு. அயிங்கரன் குகதாசன்
பரிந்துரை: ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா