NHDA இன் தலைவராக துமிந்த சில்வா நியமனம்

NHDA இன் தலைவராக துமிந்த சில்வா நியமனம்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் (NHDA) தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நியமனம் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தரவினால் கிராமிய வீடமைப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளரிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை கைதியான இவர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் கடந்த மாதம் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.