சவூதிக்கான தூதுவர் பதவிக்கு அம்சாவின் பெயர் முன்மொழிவு

சவூதிக்கான தூதுவர் பதவிக்கு அம்சாவின் பெயர் முன்மொழிவு

றிப்தி அலி

சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர் பதவிக்கு பி. அம்சா முன்மொழியப்பட்டுள்ளார். இந்த முன்மொழிவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சிபாரிசுடன் வெளிவிவகார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, பாராளுமன்ற உயர் பதவிகளுக்கான குழுவின் நேர்முகப் பரீட்சைக்கு இவர் விரைவில் அழைக்கப்படவுள்ளார். காத்தான்குடியினைச் சேர்ந்த இவர் இலங்கை வெளிநாட்டு சேவையின் சிரேஷ்ட அதிகரியாவார்.

சுமார் 20 வருடக்களுக்கு மேல் ராஜதந்திர சேவையில் அனுபமிக்க அம்சா, தற்போது வெளிவிவகார அமைச்சின் பொருளாதார விவகாரங்களுக்கான மேலதிக செயலாளராக  கடமையாற்றுகின்றார்.

இதற்கு முன்னர் துருக்கி மற்றும் ஜரேப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கான இலங்கை தூதுவராகவும், பிரித்தானியாவிற்கான இலங்கையின் பிரதி உயர் ஸ்தானிகராகவும் இந்தியாவின் சென்னையிலுள்ள  இலங்கயின் பிரதி உயர் ஸ்தானிகராலயத்தின் தலைமை அதிகாரியாவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

கடந்த 15 மாதங்களாக சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர் பதவி வெற்றிடமாக காணப்படுவதாக கடந்த வாரம் நாம் குறிப்பிட்டிருந்தோம். இந்த நிலையிலேயே குறித்த பதவிக்கு அம்சா நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.