சந்தாங்கேணி மைதான ஆவணங்களை வழங்குமாறு விளையாட்டுத் துறை அமைச்சு கோரல்

சந்தாங்கேணி மைதான ஆவணங்களை வழங்குமாறு விளையாட்டுத் துறை அமைச்சு கோரல்

கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானம் தொடர்பான ஆவணங்களை வழங்குமாறு கல்முனை மாநகர சபையிடம் விளையாட்டுத் துறை அமைச்சு கோரியுள்ளது.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளரான ரொனி இப்ராஹீமினால் கல்முனை மாநகர ஆணையாளரிடம் எழுத்து மூலம் கோரப்பட்டுள்ளது.

இதற்கமைய, கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதான காணியின் உறுதிப்பத்திரம், உரிமம், எல்கை முரண்பாடுகள் தொடர்பான அறிக்கை, நிர்மாணிக்கப்படும் எல்லைச் சுவர்கள் ஆகியன தொடர்பான அறிக்கையொன்றி சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் கீழுள்ள கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் விளையாட்டுத் துறை அமைச்சின் நிதியொதுக்கீட்டில் நீச்சல் தடாகம் மற்றும் உள்ளக விளையாட்டரங்கு ஆகியன நிர்மாணிக்கப்படுகின்றன.

இந்த நிர்மாணப் பணிகள் தொடர்பில் காணப்படுகின்ற முரண்பாடுகள் தொடர்பில் கல்முனை பிரதேசத்திலுள்ள 20 விiளாயட்டு கழகங்கள் ஒன்றிணைந்து இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிற்கு எழுத்து மூல முறைப்பாடொன்றை கடந்த மே 17ஆம் திகதி மேற்கொண்டிருந்தனர்.

இவ்வாறன நிலையிலேயே விளையாட்டுத் துறை அமைச்சினால் குறித்த மைதான ஆவணங்கள் தொடர்பான கோரல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை சந்தாங்கேணி மைதான அபிவிருத்தி தொடர்பில் விளையாட்டு அமைச்சரிடம் முறைப்பாடு