தகனக் கொள்கை விவகாரத்தில் அரசாங்கம் பின்வாங்குவது ஏமாற்றமளிக்கிறது: அமெரிக்கா

தகனக் கொள்கை விவகாரத்தில் அரசாங்கம் பின்வாங்குவது ஏமாற்றமளிக்கிறது: அமெரிக்கா

கொவிட் - 19 இனால் உயிரிழப்பவர்களை தகனம் செய்வது எனும் கொள்கையை முடிவுக்கு கொண்டுவருவதில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பின்வாங்குவது ஏமாற்றமளிக்கிறது என அமெரிக்கா இன்று (18) வியாழக்கிழமை தெரிவித்தது.

இது தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்  அலெய்னா பி. டெப்லிட்ஸ் விசேட பதிவொன்றினை அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"பாரபட்சமான தகனக் கொள்கையை முடிவுக்கு கொண்டுவருவதில் இருந்து அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவது ஏமாற்றமளிக்கிறது. அண்மையில் மரணித்த அன்புக்குரியவர்கள் உட்பட மக்கள் தங்களது உரிமைகளுக்கு ஜனநாயக அரசாங்கமொன்றிடம் இருந்து அதிக மரியாதையை பெற தகுதியுடையவர்களாவர்" என தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.