திருக்கோவிலில் முன்னெடுக்கப்படவுள்ள கொவிட் விழிப்புணர்வுகள்

திருக்கோவிலில் முன்னெடுக்கப்படவுள்ள கொவிட் விழிப்புணர்வுகள்

திருக்கோவில் பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் மோகனகாந்தன் தலைமையில் இன்று 20) காலை அவரது காரியாலயத்தில் திருக்கோவில் பிரதேச முக்கியஸ்தர்களான பாடசாலை அதிபர்கள் இமத தலைவர்கள் ஆகியோருடன்  இடம்பெற்றது.

சுமார் இரண்டு மாதங்களில் திருக்கோவில் பிரதேசத்தில் அதிகமான கொவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதும், இனிவரும் தினங்களில் கொவிட் பரவலை கட்டுபடுத்தல் பொதுமக்களுக்கு விழிப்புணர்களை மேற்கொள்ளுதல் சம்மத்தமாக இதில் கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில் திருக்கோவில் பிரதேச  பொதுசுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள் ஆலய குருமார்கள், சமயத் தலைவர், அதிபர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் இக்கூட்டத்தில்  அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மதத் தலைவர்களினால் செயற்படுத்தப்பட உள்ள தீர்மானங்கள் பின்வருமாறு

01. பொது இடங்கள் மற்றும் ஆலயங்களில் மக்கள் கலத்துகொள்வதை தடுத்தல், மேற்பார்வை செய்தல்.

02. சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பது சம்மந்தமாக விழிப்புணர்வூட்டும் வகையில் நாளாந்தம் ஆலெய ஒலிபெருக்கி மூலம் அறிவித்ல் வழங்குதல்.

03. அதிபர்கள்  ஆசிரியர்கள் மாணவர்கள் ஊடாக பெற்றோர்களுக்கு கொவிட்19 சம்மந்தமான  விழிப்புணர்வு ஊட்டல்

-ஜே.கே.யதுர்ஷன்-