பொதுச் சேவைகள் ஆணைக்குழு உறுப்பினராக சுந்தரம் அருமைநாயகம் நியமனம்

பொதுச் சேவைகள் ஆணைக்குழு  உறுப்பினராக சுந்தரம்  அருமைநாயகம் நியமனம்

பொதுச் சேவைகள் ஆணைக்குழு உறுப்பினராக ஓய்வுபெற்ற சிவில் நிர்வாக அதிகாரி சுந்தரம் அருமைநாயகத்தினை நியமிக்க பாராளுமன்ற பேரவை இணக்கப்பாட்டை வழங்கியிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

வி.சிவஞானசோதியின் மறைவையடுத்து பொதுச் சேவைகள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டது. குறித்த வெற்றிடத்தினை நிரப்புவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு பாராளுமன்ற பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சுந்தரம் அருமைநாயகம், இதற்கு முன்னர் வௌிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் செயலாளராகக் கடமையாற்றியுள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்த்தன தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை (26) ஒன்லைன் முறையில் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் ஆகியோர் இணைந்துகொண்டிருந்தனர்.