மஸ்ஜித் ஊழியர்களுக்கான சம்பளத்தினை வழங்குமாறு வக்ப் சபை அறிவிப்பு

மஸ்ஜித் ஊழியர்களுக்கான சம்பளத்தினை வழங்குமாறு வக்ப் சபை அறிவிப்பு

மஸ்ஜித் ஊழியர்களுக்கான சம்பளம் அல்லது கொடுப்பனவு ஆகியவற்றினை உரிய காலப் பகுதியில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வக்ப் சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் வக்ப் சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் பணிப்பாளரான ஏ.பி.எம்.அஷ்ரபினால் சகல மஸ்ஜித் நிருவாகிகளுக்கு இன்று (16) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கiயில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"பள்ளிவாயல் நம்பிக்கையாளர்கள் பள்ளிகளைப் பராமரிப்பதிலும் சமூக நலனிலும் காட்டி வரும் ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் நாம் மெச்சுகின்றோம்.

அதேவேளை, தங்களது சம்பளம் அல்லது கொடுப்பனவு 15.03.2020 திகதி முதல் அல்லது ஊரடங்கு அமுலில் உள்ள காலத்தில் சில மஸ்ஜித்களால் வழங்கப்படவில்லை என இமாம்கள், முஅத்தின்கள் மற்றும் ஏனைய மஸ்ஜித் ஊழியர்களிடமிருந்து பல முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த நெருக்கடியான காலப்பகுதியில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளங்கள் முறையாக வழங்கப்படுகின்றன. அவ்வாறே, மஸ்ஜித் ஊழியர்கள் வேலைக்கு சமூகமளிக்காதிருப்பது அவர்களது தவறல்ல.

மாறாக நாட்டின் சுகாதார அவசர கால நிலைமை காரணமாகவே மஸ்ஜித் ஊழியர்கள் கடைமைக்கு வர முடியவில்லை என்பதைத் கருத்திற் கொண்டு அவர்களது சம்பளமும் முறையாக வழங்கப்படல் வேண்டும்.

ஆகவே, மஸ்ஜித் ஊழியர்களுக்கான சம்பளம் அல்லது கொடுப்பனவினை மேலும் தாமதிக்காது வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மஸ்ஜித் நிருவாகிகளை இலங்கை வக்ப் சபை இத்தாள் பணிக்கின்றது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.